Asianet News TamilAsianet News Tamil

விவசாயத் தலைவர்களை சந்திக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையா!

கர்நாடக முழு அடைப்பு போராட்டத்திற்கிடையே, விவசாயத் தலைவர்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திக்கவுள்ளார்

Amid escalating protests Karnataka CM Siddaramaiah to meet farmer leaders smp
Author
First Published Sep 29, 2023, 11:48 AM IST

தமிழகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே காவிரி நதி நீர் தொடர்பான பிரச்சினை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. அக்டோபரில் திறக்க வேண்டிய 20.22 டிஎம்சி நீர் தவிர, 50 டிஎம்சி நீர் திறக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும் சூழல் உள்ளதால், தண்ணீரை திறந்து விடக் கோரினாலும், அதற்கு கர்நாக அரசு செவி மடுக்க மறுக்கிறது.

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு, உச்ச நீதிமன்றம் என எங்கிருந்து உத்தரவு வந்தாலும்,  தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. போதிய மழை இல்லாமல் கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என அம்மாநில அரசு கூறி வருகிறது.

இதனிடையே, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை, உச்ச நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட கூடாது என வலியுறுத்தி, தலைநகர் பெங்களூருவில் கடந்த 26ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று பந்த் நடைபெற்று வருகிறது.

இந்தியாவுடன் நெருங்கிய உறவு: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி!

இந்த நிலையில், விவசாயத் தலைவர்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திக்கவுள்ளார். முன்னதாக, காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் ஆகியோரும் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

கர்நாடக முழு அடைப்பு போராட்டத்தால் அம்மாநிலத்தில்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை நிலவரப்படி, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிச்செல்லும் 22 விமானங்களும், உள்வரும் 22 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு சில பேருந்துகளே ஓடுகின்றன. அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் தவிர, மற்றவை மூடப்பட்டுள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு 2000 கன்னட அமைப்புகளும், பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் கர்நாடக மாநிலமே முடங்கியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios