Amethi youth writes to Smriti Irani Help me start pakoda business

கடந்த சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சி பேட்டியில் பிரதமர் மோடி பேசும்போது, ரூ.200 வருமானம் கிடைக்கும் வகையில் பக்கோடா விற்பதும் கூட வேலைவாய்ப்புதான் என சொன்னது நாடுமுழுவதும் பகோடா பேச்சுக்கு கண்டனம் கலந்து கலாய்த்தனர். இதே கருத்தை அமித் ஷா, தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் இதே கருத்தை பேசிவந்தனர்.

இந்நிலையில், லக்னோவை சேர்ந்த அஷ்வின் மிஸ்ரா என்ற ஒரு இளைஞர், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், என்னுடைய வேலை தேடும் படலம் இத்துடன் முடிந்தது. பிரதமர் மோடியின் பேச்சை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இனி நானே சொந்தமாக ஒரு பக்கோடா கடை திறக்கப் போகிறேன். அதன் மூலம் நான் பிறருக்கும் வேலைக் கொடுப்பேன். மோடி சிறப்பாக பேசியிருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் வேலையில்லாமல் இருப்பதற்குப் பக்கோடா விற்பது நல்லது என்றுள்ளார். தினமும் ரூ.200 க்கும் அதிகமாகக் கிடைக்கும் என்றுள்ளார். அதனால் நானே இத்தகைய வேலையைச் செய்ய போகிறேன். மேலும் வேலை இல்லாமல் இருக்கும் எனது நண்பர்களையும் செய்ய சொல்ல போகிறேன் என்றுள்ளார்.

அதுபோலவே நான் இதற்காக லோன் கேட்க சென்றேன். கிட்டத்தட்ட அனைத்து வங்கியிலும் லோன் கேட்டேன். ஆனால் அவர்கள் லோன் கொடுக்கவில்லை. இதற்கு எல்லாம் லோன் தர முடியாது என்றும் கூறிவிட்டார்கள். அதனை கேட்ட உடனே எனது மனம் உடைந்து விட்டது என்றுள்ளார்.இறுதியாக அதன்பிறகுதான் பிரதம மந்திரியின் மக்கள் நல நிதி இருக்கும் விஷயம் தெரிந்தது. அதில் 10 கோடி மக்களின் நலனுக்காகக் கொடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி பேசி இருந்தார். எனவே எனக்கு அதிலிருந்து கொஞ்சம் மட்டும் தொழில் தொடங்க உதவுங்கள். இது பற்றி நீங்கள் மோடியிடம் பேசுங்கள் என ஸ்மிரிதி இராணியை அந்த இளைஞர் அதிர வைத்துள்ளார்.