american lady pilot is raped by another pilot

மதுபானத்தில் மயக்கமருந்து கொடுத்து, சக பெண் விமானியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் விமான நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள அலஸ்கா விமான நிலையத்தில் பெட்டி பீனா என்ற பெண் கடந்த ஜுன் மாதம் ஒப்பந்தம் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டார். இவருக்கு சக ஆண்
விமானியுடன் ஒன்றாக மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும் எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தப்படி, அந்த பெண் விமானி, சக ஆண் விமானியுடன் விமானத்தில் ஒன்றாக பயணித்தனர். அப்போது அந்த ஆண் விமானி, அவருக்கு மயக்க மருந்து கலந்த
மதுவை கொடுத்துள்ளார்.

மயக்க மருந்து கலந்த மதுவை குடித்த அந்த பெண் விமானி, விமானத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து மயங்கிய அவரை, ஆண் விமானி தனது அறைக்கு
அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

சில மணி நேரங்களுக்குப் பிறகு, கண் விழித்த அந்த பெண் விமானியை அவர் அடித்து துன்புறுத்தியும் உள்ளார். இந்த சம்பவம் குறித்து பெண் விமானி பீனா, விமான
நிறுவனத்தில் புகார் தெரிவித்தார்.

ஆனால், அந்த நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் விமானி, விமான நிறுவனத்துக்கு எதிராக
வழக்கு தொடர்ந்தார். குறிப்பிட்ட அந்த விமான நிறுவனத்தில் இதுபோல் பல பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.