உத்தர பிரதேச மாநில உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க அந்த மாநில அரசு பிறப்பித்த வரைவு அறிக்கையை, அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் 17 மாநகராட்சிகள், 200 நகராட்சிகள் மற்றும் 545 நகர பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் வரைவு அறிக்கையை உ.பி. அரசு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியிட்டது.

4 மேயர், 54 நகராட்சி தலைவர், 147 நகர பஞ்சாயத்து தலைவர் பதவிகளை ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வரைவு அறிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

பிரதமர் மோடியின் சகோதரர் சென்ற கார் விபத்து: வீடியோ

அப்போது, உ.பி. மாநில அரசு வெளியிட்ட ஓ.பி.சி. இட ஒதுக்கீடுக்கான வரைவு அறிக்கையை ரத்து செய்வதாவும் இட ஒதுக்கீடு இல்லாமலே உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது, உள்ளாட்சித் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது. இப்போது அந்தத் தடையை நீக்கி, இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்தலை நடத்துவதற்கான திருத்திய அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் நடத்தப்படாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Scroll to load tweet…

“உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கருத்துக்கணிப்பு நடத்தி, அதன் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும். தேவைப்பட்டால் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்படும்.” என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலிலேயே அதிகஊழல் நிறைந்த குடும்பம் என்றால் அது சோனியா காந்தி குடும்பம்தான்: பாஜக விளாசல்