ஞானவாபி மசூதியில் பூஜையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி: அலகாபாத் நீதிமன்றம் அதிரடி
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்து வழிபட அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தித் தொடரப்பட்ட வழக்கை அலகபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்து வழிபட அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தித் தொடரப்பட்ட வழக்கை அலகபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் ஜனவரி 31, 2023 அன்று உத்தரவிட்டது. மசூதியின் தெற்குப் பகுதியில் உள்ள சிவ லிங்கத்திற்கு இந்து மதத்தினர் பூஜை மற்றும் வழிபாடு நடத்தலாம் என வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இதனை எதிர்த்து ஞானவாமி மசூதி கமிட்டி சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்துக்கள் ஞானவாபி மசூதியின் சீல் செய்யப்பட்ட அடித்தளத்தில் வழிபாடு நடத்த அனுமதிக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
முன்னதாக, மசூதிக்குள் பூஜை செய்ய அனுமதிக்கும் மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக, இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறும்போது, “வாரணாசி நீதிமன்ற உத்தரவுப்படியே மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தடுப்புகளை சரிசெய்து, தினசரி வழிபாடு தொடங்கபட்டுள்ளது" என்றார்.
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி கிடைத்த மறுநாள், அங்கு பூஜைகள் தொடங்கியுள்ளன. காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பூசாரி ஒருவர் ஞானவாபி மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்தினார். அவரது தாத்தா தான் டிசம்பர் 1993 வரை அதே சிவலிங்கத்துக்கு பூஜை செய்தார் என்றும் கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வரைக் கைப்பிடித்து ஆடம்பரமாக வாழும் நடிகை! சொத்து மதிப்பைக் கேட்டா தலைசுத்தும்!