சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மாலை 4 மணி முதல் 10 மணி  வரை நடை சாத்தப்படுகிறது. 

அரிய, வான் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இரவு 10.52 மணி முதல் 12.48 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. அப்போது, கோயில் நடைகள் அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இன்று மாலை 4 மணியளவில் நடை அடைக்கப்படுகிறது. 

தங்கும் அறைகளிலும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அன்னப் பிரசாதக் கூடமும் மூடப்பட்டு இருக்கும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, அதிகாலை 2 மணி வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.இதையடுத்து கோயில் சுத்தப்படுத்தப்பட்டு சுப்ரபாதம், தோல்மாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்ம ஆராதனைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

அதாவது  சுமார் 15 மணி நேரத்துக்குப் பின்னரே, ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனால் இன்று விசேஷ பூஜை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்திலும், கோயில்களில் நடை சாத்தப்படுகின்றன.