all of a sudden river water turned black in colour

ஆற்று நீரில் சிமெண்ட் போன்ற கலவை கலந்ததால் கருமை நிறமாக மாறி உள்ளது.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் முக்கிய ஆறாக இருப்பது சியாங் நதி.அதாவது பிரம்பபுத்திரா நதி .மக்களின் நீர் தாரமாக விளங்குவது இந்த நதி தான்.இந்த நதி நீரை தான் அங்கு வாழும் மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர்

இந்நிலையில் சமீப காலமாக சியாங் நதியில் ஓடும் தண்ணீர் கருமையாக மாறி உள்ளது.தூரத்தில் இருந்து பார்பதற்கு சாக்கடை தண்ணீர் போல் காட்சி அளிக்கிறது.ஆனால் அருகில் சென்று பார்த்த போது,நீரில் சிமெண்ட் போன்ற கலவை இருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இதனை தொடர்ந்து இந்த நதியை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீரில் சிமெண்ட் போன்ற கலவை கலந்ததற்கு சீனா அரசை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதாவது சீன நாட்டில் தயாரிக்கும் பல பொருட்களின் கழிவுகளையும் சில ரசாயனம் கலந்த கழிவுகளையும் இந்த நதியில் கொட்டுவதால், நதிநீர் முழுவதும் விஷமா மாறி உள்ளது என்றே மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில்,இந்திய அதிகாரிகளும் இந்த நதி தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதால் மேலும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்