இந்தியாவில் நடைமுறையில் உள்ள எல்லா ஆயுள் காப்பீட்டுத் திட்ட வாடிக்கையாளர்களும் தங்கள் பாலிசியுடன், தங்களது ஆதார் எண்னை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசின் காப்பீட்டுத் திட்ட ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (ஐஆர் டிஏ) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சட்ட திருத்தத்தின்படி...

இந்தியாவில் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள பணமோசடி தடுப்புச் சட்டம் - 2017 (ஆவணப் பராமரிப்பு) இரண்டாவது திருத்தத்தின்படி, உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களுக்கு எடுக்கப்பட்டு நடைமுறையில் உள்ள ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு, பாலிசிதாரர்களின் ஆதார் எண்ணினை இணைப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

பணப்பயன் பெற...

இதன்படி தற்பொழுதுள்ள பாலிசிகளுக்கான பணப்பயனை பெறுவதற்காக வாடிகையாளர்கள் தங்களுடைய ஆதார் எண், நிரந்தர கணக்கு எண் அல்லது ‘பார்ம் 60’ ஆகியவற்றை இணைப்பது கட்டாயமாகிறது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இணைப்புக்கான இறுதித் தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. அத்துடன் மோட்டார் வாகனங்களுக்கான ஆயுள் காப்பீடுகளுக்கு ஆதார் எண்ணினை இணைப்பது பெரும் சிக்கல் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.