லட்சுமியின் மறுவடிவம் நமது மகள்கள். இந்த தீபாவளியில் அவர்களை வழிபடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

டெல்லி துவாரகாவில் தசரா பண்டிகையை பிரதமர் நநேந்திர மோடி தொடங்கி நேற்று வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: லட்சுமி நம் வீட்டில் இருக்கிறாள். மனதலிருந்து பேசுகிறேன் நிகழ்ச்சியில், நம் வீட்டில், நமது பகுதியில் லட்சுமி  இருக்கிறாள். லட்சுமியின் மறுவடிவம் நமது மகள்கள் என சொல்லி இருந்தேன்.

நவராத்திரியின் உணர்வுடன் தொடர்ந்து இந்த தீபாவளியில் அனைத்து மகள்களையும் வழிபட வேண்டும் மற்றும் மதிக்க வேண்டும். பெண்களின் அதிகாரம் மற்றும் கண்ணியத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுவோம். பெண் குழந்தை காப்போம், அவர்களுக்கு கல்வி அளிப்போம் என்பது என்னுடைய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.

நமது திருவிழாக்கள் அனைத்தும் கல்வி. தேவைப்படும் போது நாம் அவற்றில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். ஏனென்றால் நம்முடைய சமூகத்தில் தீமைக்காக எதிராக போராடும் மக்கள் உள்ளனர். நமக்குள் உள்ள தீமையை எதிர்த்தும் போராடுவதும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.