கடந்த 10 ஆண்டுகளில் இந்தியர்களின் மதுகுடிக்கும் அளவு இரு மடங்கு அதிகரித்துள்ளது, மதுவால் ஆண்டுக்கு 2.60 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: சர்வதேச அளவில் தனமனிதர்கள் மதுகுடிக்கும் அளவு கடந்த 2000 முதல் 2005 வரை நிலையான அளவில் இருந்தது. ஆனால், 2005-ம் ஆண்டுக்குப் பின், ஒருவர் குடிக்கும் மதுவின் 5.5 லிட்டர் என்ற அளவில் இருந்து 2010-ம் ஆண்டு 6.4 லிட்டராக 2016-ம் ஆண்டு வரையிலும் காணப்படுகிறது.

 

கடந்த 2016-ம் ஆண்டில் உலக அளவில் ஆண்டுதோறும் 30 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர், 1.32 கோடி பேருக்கு உடல் ஊனக்கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் ஆண்களில் 23 லட்சம் பேருக்கும், பெண்களில் 7 லட்சம் பேருக்கும் உடல் ஊனக்கோளாறுகள் ஏற்படுகின்றன. உடல்ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பொருத்தவரை 1.6 கோடி பேர் ஆண்களாகவும், 26 லட்சம் பெண்களாவும் உள்ளனர். 

இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டு தனிமனிதர்கள் மதுகுடிக்கும் அளவு 2.4 லிட்டராக இருந்தது. இது 2016-ம் ஆண்டு 5.7 லிட்டராக அதிகரித்துவிட்டது. இதில் பெண்கள் 1.5 லிட்டர் மதுவும், ஆண்கள் 4.2 லிட்டர் மதுவும் குடிக்கின்றனர். காசநோய், எயட்ஸ், நீரழிவு போன்ற நோய்களில் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் மதுவால் உயிரிழப்பவர்கள்தான் அதிகம். உலக அளவில் மக்களின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவற்றில் மதுவே முதலிடத்தில் இருக்கிறது. மதுவால் கருத்தரித்தல், குழந்தை பிறப்பில் பாதிப்பு, தொற்றுநோய்கள், தொற்று அல்லாத நோய்கள், மனநில பாதிப்பு, காயங்கள், விஷம் அருந்துதல் போன்ற நேரடியான பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் மதுவால் இறப்பவர்கள் எண்ணிக்கை 2.60 லட்சமாக இருக்கிறது. உலகளவில் நாள்ஒன்றுக்கு மதுவால் மட்டும் 6 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் சாலை விபத்துக்களில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் இறக்கிறார்கள், இவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதுபால் பாதிப்பட்டு இந்த விபத்துக்களைச் சந்திக்கிறார்கள்.

மதுவால் ஏற்படும் புற்றுநோயால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் இந்தியாவில் உயிரிழக்கிறார்கள். மது அதிகம்குடிப்பதால், ஏற்படக்கூடிய பாதிப்புகளில் முக்கியமானது கல்லீரல் பாதிப்பாகும். இந்த கல்லீரல் பாதிப்பால் மட்டும் ஆண்டுதோறும் இந்தியாவில் 1.4 லட்சம் பேர் இறக்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.