Sengol: ஜனநாயக நாட்டில் செங்கோலா? அரசியமைப்பு சட்ட நகல் தான் இருக்கணும்; சமாஜ்வாடி எம்பியின் புதிய சர்ச்சை!!

மக்களவையில் சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் நிறுவப்பட்டு இருக்கும் 'செங்கோல்' குறித்து தற்போது மக்களவையில் சர்ச்சை எழுந்துள்ளது. 

Akhilesh Yadav's Samajwadi MP wants constitution to replace with Sengol in Tamil BJP hits back

ஜனநாயகத்திற்கும், செங்கோலுக்கும் என்ன சம்மந்தம் என்று சமாஜ்வாடி கட்சி எம்பி கேள்வி எழுப்பி இருப்பது சல சலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மன்னர் ஆட்சி காலத்திற்கு அடையாளமாக இருந்த செங்கோலுக்கும், தற்போது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு இருக்கும் ஜனநாயக ஆட்சிக்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.சௌத்ரி கடிதம் எழுதி இருக்கிறார். இதையடுத்து, 5 அடி நீளமுள்ள, தங்க முலாம் பூசப்பட்ட செங்கோல் குறித்த விவாதம் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் மோகன்லால்கஞ்ச் தொகுதி எம்.பி., 'செங்கோல்' வைப்பதற்கு பதிலாக அந்த இடத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

"நாட்டில் ஜனநாயகத்தின் தொடக்கத்தை அரசியலமைப்பு சட்டம் காட்டுகிறது. எப்போது நாம் இதை ஏற்றுக் கொண்டோமோ அன்று முதல் ஜனநாயகத்திற்கான அடையாளமாக அரசியமைப்புச் சட்ட புத்தகம் திகழ்கிறது. பாஜக அரசு சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் கடந்த ஆட்சியில்  'செங்கோல்' நிறுவியது. செங்கோல் என்பது தமிழ் வார்த்தை. மன்னர்களின் காலத்திற்குப் பின்னர் சுதந்திரம் பெற்று தற்போது வாக்களித்து அரசாங்கத்தை தேர்வு செய்து வருகிறோம்.  எனவே,  ஜனநாயகத்தைக் காப்பாற்ற அரசியலமைப்பின் நகலை 'செங்கோல்' இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்'' என்று எம்பி ஆர்.கே.சௌத்ரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 37 இடங்களை வென்று  மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது.

புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல்: பிரதமர் மோடி பெருமிதம்

கட்சி எம்.பி.யின் கருத்து குறித்து அகிலேஷ் யாதவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ''செங்கோல் நிறுவப்பட்டபோது, ​​பிரதமர் அதற்கு தலை வணங்கினார். ஆனால் இந்த முறை பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டபோது அதற்கு தலைவணங்கவில்லை. இதைத்தான் எங்களது எம்பி பிரதமருக்கு நினைவூட்ட விரும்பினார்'' என்று பதில் அளித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான பி.மாணிக்கம் தாகூர் கூறியதாக என்டிடிவி வெளியிட்டு இருந்த செய்தியில், ''செங்கோல் என்பது மன்னராட்சியை குறிக்கிறது. மன்னராட்சி முடிந்துவிட்டது என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். மக்கள் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நாம் கொண்டாட வேண்டும்," என்று தெரிவித்து இருக்கிறார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பியும், லாலு பிரசாத் யாதவின் மகளுமான மிசா பாரதிதெரிவித்து இருக்கும் கருத்தில், ''இந்தக் கருத்தை யார் வலியுறுத்தி இருந்தாலும், நான் அதை வரவேற்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தமிழன்டா.. தமிழுக்கு பெருமை சேர்த்த மோடி! ‘மகிழ்ச்சி’ ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன பிரதமர் மோடி

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். 18வது புதிய மக்களவை கடந்த 24ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. அவை துவங்கிய நாளில் இருந்து, அரசியமைப்புச் சட்ட புத்தக்கத்தை வலியுறுத்தி குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூனே கார்கே, ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களது கையில் அரசியமலைப்பு சட்ட நகலை வைத்துக் கொண்டு இருந்தனர். 

மேலும், பிரதமர் மோடி பதவி ஏற்கும்போதும், அவையில் அமர்ந்து இருந்த ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சியினர் அரசியமைப்பு சட்ட நகலை கையில் ஏந்தியவாறு அமர்ந்து இருந்தனர். எதிர்க்கட்சி எம்பிக்களும் கையில் சட்ட நகலை வைத்துக் கொண்டு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள்  ஒன்று என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios