தல_யிடம் ஆயிரம் ஸ்பெஷாலிட்டி இருந்தாலும் கூட  அவரது ‘தலை’ செம ஸ்பெஷல்! ஹீரோயிஸத்தில் நரை முடிக்கும் ஒரு மரியாதையை உருவாக்கியவர் அவர்தானே!

தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கென்று சில யூனிஃபார்ம்கள் இருக்கின்றன. அதில் நரையற்ற தலை வெகு முக்கியம். சினிமாவில் மட்டுமல்ல வெளி நிகழ்ச்சிகளிலும் பார்வையாளர்கள் கண்ணில் தன் தலையிலுள்ள சில்வர் லைன்ஸ் தெரியாமல் சீக்ரெட்டை மெயின்டெயின் செய்வார்கள். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரெல்லாம் அவரது பேரனுக்கே இளநரை வந்த பின்னும் கூட விக் வைத்து ஹீரோ வேஷம் கட்டினார். விக் நிற்பதற்கு சப்போர்ட் செய்யும் தலைமுடியிலும் கூட கறுகறுத்த மை பூசிய பின்னரே அடவு கட்டி ஆக்ஷன் அட்ராசிட்டி பண்ணுவார். க்ளோசப் காட்சிகளில் அந்த அட்டர் பிளாக் டை ரசிகனின் மூஞ்சியில பொளேர் பொளேர் என்று அறையும். ஆனால் அதையும் துடைத்துவிட்டு ’சூப்பரப்பு’ என்று பொங்குவான் ரசிகன்.

கன்னடத்தில் மட்டுமில்லை தமிழில் நம்ம ஐஸ்வர்யா, செளந்தர்யா அப்பாவும், தெலுங்கில் ராம்சரண் டாடியும் இதையேதான் இன்னைக்கு வரைக்கும் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். என்ன ஒன்று...டை மட்டும் ஃபாரின் இம்போர்டட் அவ்வளவே!

ஆக தலையே போகும் நிலை வந்தாலும் கூட தன் தலைக்கு டை அடித்துவிட்டே ரெடியாகும் சினிமா உலகில், செம மாஸ் சப்ஜெட்டில் ஹீரோவாக நடிக்கும் ஒருவர் டை அடிக்காமல் வெள்ளை நிற கேசத்துடன் கேமெரா முன் நின்றார் என்றால் அது நம்ம அஜீத் மட்டுமே. என்னதான் ரஜினி பொது இடங்களுக்கு வெள்ளை முடியுடன் வருவார் என்றாலும் சினிமாவில் அந்த ரிஸ்கை எடுக்க மாட்டார். ‘ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்க’ என்று தவிர்ப்பார். ஆனால் ‘என் ரசிகர்கள் என் நரையையும் ஏத்துப்பாங்க. ஏன்னா தே லவ் மீ லைக் எனிதிங்!’ என்று சால்ட் அண்டு பெப்பராய் வந்து நின்ன மனிதர் அஜீத்.

மங்காத்தா சினிமாவின் போஸ்ட் ப்ரொடக்ஷன் விஷயங்களெல்லாம் முடிந்து ரெடி டு ஹிட் தி ஃப்ளோர் என்ற நிலை வந்தபோது. இயக்குநர் வெங்கட் பிரபு ‘சார், தலைக்கு டை பண்ணிடலாமே’ என்று சொன்னபோது ‘நோ வெங்கி! இப்படி சால்ட் அண்டு பெப்பராவே விடுவோம்.” என்று செம சிம்பிளாய் சினிமா ரூலை பிரேக் செய்தவர் தல. வெங்கிக்கு முதலில் பகீரென்றுதான் இருந்தது. ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஷூட் முடிந்து ரஷ் போட்டு பார்த்தபோது தலயின் அட்ராசிட்டி லுக்கில் மெர்சலாகிவிட்டார் வெங்கட் பிரபு.

அப்போதுதான் வெங்கிக்கு புரிந்தது மங்காத்தாவில் அஜீத்தின் நெகட்டீவ் ஹீரோ கேரக்டருக்கு செமத்தியாக இந்த லுக் செட்டாகியிருப்பது. ஆக தன் கேரக்டரை செமத்தியாக உள்வாங்கி அதை தன் இயல்பான தோற்றத்திலேயே நச்சென்று வெளிப்படுத்த மிக நேர்த்தியாக அஜீத் திங் பண்ணி முடிவு செய்திருக்கார் என்பதையும் வெங்கட் பிரபு புரிந்து கொண்டார். அதனால்தான் ‘ஒரு இமேஜ் ஸ்கிரீன்ல எப்படி, எந்தளவுக்கு வெளிப்படும் அப்படிங்கிறதை ஒரு சினிமோட்டாகிராபர் ரேஞ்சுக்கு யோசிக்கு பியூட்டிஃபுல்லா அதை வெளிப்படுத்த கூடிய ரேர் ஹீரோ நம்ம தல.’ என்று மங்காத்தாவின் ப்ரமோஷனின் போது சிலிர்த்தார் வெங்கட் பிரபு. ஹேர் ஸ்டைல் சப்ஜெக்டில் ‘சால்ட் அண்டு பெப்பர்’ எனும் ஒரு புது ஜானரையே உருவாக்கியவர் நம்ம தல என்றால் அது மிகையாகாதுங்க.

இந்த போஸ்ட்டுக்கு தல ஸ்டைலில் ஒரு பஞ்ச் வைக்கலாமென்றால் ‘நம்ம லுக் அட்ராசிட்டியா தெறிக்கணும்னா நாலு முடி வெள்ளையா இருக்குறதுல தப்பே இல்ல!’