Asianet News TamilAsianet News Tamil

ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய ஏர்டெல், வோடாபோன்… அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தப்பட்டதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் வோடாபோன் ஐடியோ நிறுவனமும் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. 

airtel and vodafone recharge plans hiked
Author
India, First Published Nov 23, 2021, 4:08 PM IST

ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தப்பட்டதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் வோடஃபோன் ஐடியோ நிறுவனமும் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. தொலைதொடர்பு நிறுவனங்கள் அண்மையில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின. மேலும் குறைந்த பட்ச ரீசார்ஜ் முறையையும் கட்டாயமாக்கினர். இந்த நிலையில் தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் ப்ரீபெய்டு கட்டணங்களை நேற்று உயர்த்தியது. ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. புதிய கட்டணம் வரும் 26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பேசிக் ப்ளான் ரூ. 79ல் இருந்து ரூ. 99ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு அடுத்த ப்ளானான ரூ.149, நவம்பர் 26க்குப் பின்னர் ரூ.179 ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

airtel and vodafone recharge plans hiked

இந்த நிலையில் விஐ என்னும் வோடாபோன் ஐடியாவும் தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது குறித்த புதிய அறிவிப்பு மற்றும்  பிளான் விவரங்களை அறிமுகப்படுத்தியுள்ள விஐ, தற்போதைய சூழலில் தனிநபர் மூலம் கிடைக்கு வருவாயை அதிகப்படுத்துவதன் மூலம் தொழில்துறை எதிர்கொள்ளும் நிதி அழுத்தத்தை சமாளிக்க முடியும் என்றும் இது தங்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதை அடுத்து விஐ அறிமுகப்படுத்தியுள்ள புதிய பிளான்கள் 99 ரூபாயிலிருந்து தொடங்கி, அதிகபட்சமாக  ரூ.2,399 என மாற்றப்பட்டுள்ளது. தற்போது 79 ரூபாயில் கிடைக்கும் சேவையானது வருகிற 25 ஆம் தேதிக்கு பிறகு 99 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. 79 ரூபாய் சேவைகளில் கிடைக்கும் சேவைகள்தான் 99 ரூபாயிலும் கிடைக்கும் என்றாலும் 99 ரூபாய்க்கான டாக் டைமை பெறலாம். அதே போல 149 ரூபாயிலிருந்த ஆரம்ப வாய்ஸ் அன்லிமிட்டட் பிளான்  179 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு அதிகபட்ச வரம்பாக இருந்த 2,399 ரூபாய் திட்டமானது 2,899 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல 219 ரூயாக ஆக இருந்த வாய்ஸ் பிளான் 269 ரூபாய்க்கும், 249 ரூபாயாக இருந்த  பிளான் 299 ரூபாய்க்கும், 299 ரூபாயாக இருந்த பிளான் 359 ரூபாயாகவும் மாற்றப்பட்டுள்ளது.

airtel and vodafone recharge plans hiked

மேலும் ரூ.399 என்ற மதிப்பில் இருந்த சந்தா , ரூ.459 ஆக மாற்றப்பட்டுள்ளது. 449 ஆக இருந்த பிளான் 539 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதே போல ரூ.379, ரூ.599, ரூ699, ரூ1499 ஆக இருக்கும் சந்தாக்கள் தற்போது ரூ.459, ரூ.719, ரூ839, ரூ.1799 என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டேட்டா ஆட் ஆன் என அழைக்கப்படும் சிறப்பு  டேட்டா பிளான்களும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 3 ஜிபி டேட்டா ரூ 48 என்ற விலையில் கிடைக்கிறது , இதன் விலை ரூ.58 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதே போல 12 ஜிபி கிடைக்கும் 98 ரூபாய் பிளானானது 118 ரூபாய் என மாற்றப்பட்டுள்ளது. 50 ஜிபி கூடுதல் டேட்டா 251 என்ற விலையில் கிடைக்கும் நிலையில் அதன் விலை 298 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இறுதியாக 100 ஜிபி கிடைக்கும் 351 ரூ டேட்டா பிளானானது 418 ஆக மாற்றப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தியிருப்பது அதன் வாடிக்கையாளர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ள புதிய பிளான் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios