ஏர் இந்தியா நிறுவனம் இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அது என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 

Special gift for military personnel: Air India's offer announcement! நம்முடைய இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பயங்கரவாத முகாம்களை , 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதலை நடத்தி வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 

இத்தகைய சூழ்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம், தங்களது விமானத்தில் பயணம் செல்லும் இந்திய ராணுவத்தினருக்கு சில சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக நடத்தி முடித்ததால், இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களை கௌரவிக்கும் விதமாக ஏர் இந்தியா சற்று முன் சில சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், இந்தியா மற்றும் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானங்களில் இம்மாதம் இறுதிவரை பயணம் செய்யும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க ஏர் இந்தியா நிறுவனம் முன்வந்துள்ளது. அதுபோல முன்பதிவு செய்தவர்களின் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளன. 

ஜூன் 30 ஆம் தேதி வரை கட்டணம் ஏதுமின்றி, ஒருமுறை பயண நேரத்தை மாற்றிக் கொள்ளும் சலுகை வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.