துபாயிலிருந்து 177 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் சேர்த்து மொத்தமாக 191 பேருடன் கேரளாவிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(IX 1344) கோழிக்கோடு அருகேயுள்ள காரிபூர் விமான நிலையத்தில் இன்று இரவு 7.40 மணிக்கு தரையிறங்கியது. 

விமானம் தரையிறங்கும்போது, ஓடுதளத்தில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானமே இரண்டாக உடைந்தது. அந்தளவிற்கு கோரமாக நடந்துள்ளது இந்த விபத்து. விமானி உட்பட இருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 குழந்தைகள் உட்பட மொத்தம் 191 பேர் அந்த விமானத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது. தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

காயமடைந்தவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து விரிவான, தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.