திருச்சியில் இருந்து இன்று நள்ளிரவு  ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 130 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது.. திருச்சி விமான நிலைய ஓடுதள பாதையில் இருந்து விமானம் மேலெழும்பிய போது அங்கிருந்த வான் போக்குவரத்து கட்டுப்பாட்டிற்கான டவர் மற்றும் சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தி சேதங்களுடன் பறந்து சென்றது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தனது கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்தில் இருந்த ஏடிசி டவர் (போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம்) மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதியிருக்கலாம் என தெரிகிறது. 

இதையடுத்து 4 மணி நேரத்திற்கு பின் மும்பை யில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டாலும் 130 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விரிவான விசாரணைக்கு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.