ஏர் இந்தியா விமானத்தில் இனி 'ஹலால்' உணவு வழங்கப்படாது! வெளியான முக்கிய அறிவிப்பு!
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா, விமான உணவுகள் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது. இனி இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு 'ஹலால்' சான்றளிக்கப்பட்ட உணவுகளை வழங்கப்போவதில்லை.
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், விமானத்தில் வழங்கப்படும். உணவுகள் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் இனி இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு 'ஹலால்' உணவுகளை வழங்கப்போவதில்லை என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
குறிப்பாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜூன் 17 அன்று, விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மணிக்கம் தாகூர், ஏர் இந்தியா மத அடிப்படையில் உணவுகளை லேபிளிடுவது குறித்து கவலை தெரிவித்தார்.
ஏர் இந்தியா வலைத்தளத்தின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்த எம்.பி., "இந்து" அல்லது "முஸ்லிம்" உணவு என்றால் என்ன என்று கேள்வி எழுப்பினார். விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் நடவடிக்கை எடுக்கக் கோரிய அவர் , "சங்கிகள் ஏர் இந்தியாவைக் கைப்பற்றியுள்ளார்களா?" என்றும் கேள்வி எழுப்பினார். இந்த சூழலில் ஏர் இந்தியா நிறுவனம் இந்துக்கள், சீக்கியர்களுக்கு ஹலால் உணவு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.