எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது! இந்திய விமானப் படைக்கு புகழாரம் சூட்டிய ஆனந்த் மஹிந்திரா
உலகில் இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும்போது, நமது வான்வெளியின் பாதுகாவலர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்று ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.
இந்திய விமானப்படை இன்று தனது 91வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. 72 ஆண்டுகளுக்குப் பிறகு, விமானப்படையின் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் விமானப்படையின் புதிய கொடி வெளியிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிரயாக்ராஜில் நடைபெறும் வருடாந்திர விமானப்படை தின அணிவகுப்பில் இது வெளியிடப்பட்டிருக்கிறது.
"இந்திய விமானப்படையின் வரலாற்றின் வரலாற்றில் அக்டோபர் 8 ஒரு முக்கியமான நாளாக இருக்கும். இந்த வரலாற்று நாளில், விமானப்படைத் தளபதி புதிய கொடியை வெளியிடுவார்" என இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ட்விட்டரில் பதிவு ஒன்றை எழுதியிருக்கும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, "உலகில் இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும்போது, நாம் நமது வான்வெளிப் பாதுகாவலர்களுக்கு பெருமளவில் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நினைவூட்டப்படுகிறது. அவர்கள் நம்மையும் நம் குடும்பங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. ஜெய் ஹிந்த்!" என்று கூறியுள்ளார்.
ஆதித்யா எல்1 விண்கலத்தின் பாதை மாற்றும் பணிகள் அக். 6இல் முடிந்தன: இஸ்ரோ தகவல்
இந்த விமானப்படை நாள் நாடு முழுவதும் பெரும் அணிவகுப்புகளுடன் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், இந்திய விமானப்படை வீரர்கள் தங்கள் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்காக கௌரவிக்கப்படுகிறார்கள்.
விமானப்படை தின அணிவகுப்பு என்பது விமானப்படை நிறுவப்பட்டதன் நினைவாக நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வாகும். இந்த அணிவகுப்பு தேசத்தைப் பாதுகாப்பதில் இந்திய விமானப்படையின் திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைகிறது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: தரைமட்டமான 1,328 வீடுகள், பலி எண்ணிக்கை 2000 க்கு மேல் அதிகரிப்பு!