air coolers for animals
வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் பொருட்டு, ஹைதராபாத்தில் உள்ள நேரு வன விலங்கு பூங்காவில் விலங்குகளுக்கு ஏர் கூலர்கள் பொருத்தப் பட்டு உள்ளது.
கோடைகாலம் தொடங்கியதுடன் தொடந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இந்நிலையில் அடுத்து வரும் இரண்டு முதல் ணமூன்று மாதங்களுக்கு.முன்பு இருந்ததை விட இந்த ஆண்டு வெயில் மிக அதிகமாக இருக்கும் என ஏற்கனவே இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
இதனையடுத்து வரும் நாட்களில் வெயில் மேலும் அதிகரிக்கக்கூடும் தருவாயில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹைதராபாத்தில் உள்ள நேரு வன விலங்கு பூங்காவில் விலங்குகளுக்கு ஏர் கூலர்கள் பொருத்தப்பட்டு உள்ளது
அதாவது விலங்குள் அடைக்கப்பட்டுள்ள கூண்டில், தனி ஏர் கூலர் பொருத்தப்பட்டுள்ளது. இதே போன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள வான் விஹார் தேசிய பூங்காவில் ஏர் கூலர் பொருத்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
