கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, தவறான சிகிச்சை அளித்த 5 டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்ப்பட்டனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணியான ராஜ்பிர் கவுர் என்ற பெண் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர் குழுவினர், அவருக்கு சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்தனர். ஆனால், குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது, ராஜ்பிர் கவுர், மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதனால், அவரது உறவினர்கள், டாக்டர்களின் தவறான சிகிச்சையால், ராஜ்பிர் கவுர் இறந்தார் என குற்றஞ்சாட்டினர். மேலும், மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியர்களும், கர்ப்பிணி பெண் இறந்தது தவறான சிகிச்சையே காரணம் என கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், இதுதொடர்பாக விசாரணை நடத்தியது. அதில், உரிய உபகரணங்கள் இல்லாமலும், அறுவை சிகிச்சை முன் நோயாளிக்கு அளிக்க வேண்டிய மருந்துகள் செலுத்தாததும், தெரிந்தது. இதையடுத்து 5 டாக்டர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.