அக்னிவீர் அஜய் குமார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவில்லையா? விமர்சனங்களுக்கு பதில் அளித்த இந்திய ராணுவம்!
ராணுவப் பணியின்போது உயிரிழந்த அக்னிவீர் அஜய் குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
பணியின்போது உயிரிழந்த அக்னிவீர் அஜய் குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து ட்விட்டரில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"பணியின் போது உயிரிழந்த அக்னிவீர் அஜய் குமாரின் அடுத்த குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என சமூக ஊடகங்களில் சில பதிவுகள் வெளியாகியுள்ளன.
அக்னிவீர் அஜய் குமார் செய்த உன்னத தியாகத்திற்கு இந்திய ராணுவம் தலை வணங்குகிறது. இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. அக்னிவீர் அஜய் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
அக்னிவீர் திட்டத்தின் விதிகளின்படி, ஏறத்தாழ 67 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை மற்றும் பிற நன்மைகள், காவல்துறை சரிபார்ப்புக்குப் பிறகு, விரைவில் வழங்கப்படும். மொத்தத் தொகை தோராயமாக ரூ. 1.65 கோடியாக இருக்கும்.
அக்னிவீரர்கள் உட்பட, வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு விரைவாக வழங்கப்படுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்"
இவ்வாறு இந்திய ராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை நாடாளுமன்ற மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அக்னிவீர் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார். அக்னிவீர் திட்டத்தில் சேருபவர்களை அரசாங்கம் உபயோகப்படுத்திக்கொண்டு தூக்கி எறிகிறது என்றும் ஒரு உயிர்த்தியாகம் செய்த அக்னிவீர் வீரர் 'தியாகி' என்று அழைக்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
எடையைக் குறைத்து தாறுமாறான லுக்கில் ஷாலின் ஜோயா! சூட்டைக் கிளப்பும் வைரல் போட்டோஸ்!