அக்னி 5 ரக ஏவுகணை சோதனை வெற்றி... இலக்கை துல்லியமாக தாக்கியதாக தகவல்!!
அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் அக்னி 5 ரக ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது.
அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் அக்னி 5 ரக ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது. அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட அக்னி-5 ஏவுகணையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) வடிவமைத்துள்ளது. அணு ஆயுதங்களை சுமந்து 5,500 கி.மீ. தொலைவிற்கு சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இதையும் படிங்க: நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா… மக்களவையில் நிறைவேற்றம்!!
இந்த ஏவுகணை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவு ஏவு தளத்தில் நேற்று பரிசோதிக்கப்பட்டது. அப்போது திட்டமிட்டபடி குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏவுகனை சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை ராணுவ பயன்பாட்டிற்கு பெருமளவு உதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜே.இ.இ மெயின் தேர்வு 2023க்கான தேதிகள் வெளியீடு… அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது என்.டி.ஏ!!
இந்த சோதனை காரணமாக அப்பகுதியில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இதுபோல அக்னி ரக ஏவுகனைகள் சோதிக்கப்பட்டுள்ளது. 2013, 2015, 2016, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்த ரக ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசொதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.