After viral video of Zivas Malayalam song Kerala temple invites Dhonis daughter as special guest
மலையாள சினிமா பாடலைப் பாடிய கிரிக்கெட் வீரர் தல மகேந்திர சிங் தோனியின் மகளை சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்துள்ளது கேரளாவில் உள்ள திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில் நிர்வாகம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஐந்து வயது மகள் ஸிவா. சமீபத்தில் இவர் தனது மழலைக் குரலில் பாடிய மலையாள சினிமா பாடல் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
மலையாளத்தில் மோகன்லால் நடித்த "அத்வைதம்" படத்தில் வரும் அம்பலப்புழே என்று தொடங்கும் இந்த பாடலைப் தனது மழலைக்குரலில் பாடினார் தோனி மகள் ஸிவா. அவர் பாடிய அந்தப் பாடல் ஸிவா சிங் தோனி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, பலரும் தங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
@mahi7781 @sakshisingh_r ❤️❤️. Song taught by “Sheila Aunty”(her Nanny from Kerala)
A post shared by ZIVA SINGH DHONI (@zivasinghdhoni006) on Oct 24, 2017 at 5:26am PDT
இந்நிலையில், இப்பாடலை கேட்ட கேரளா திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் நிர்வாகிகள் வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும் 'பந்த்ரண்டு கலாபாம்' என்ற விழாவில் கலந்து கொள்ள தோனி குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விழாவில் தோனியின் மகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்படவுள்ளது.
A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on Jun 14, 2017 at 11:40am PDT
இதுகுறித்து அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் ஆலோசனைக்குழு தலைவர் கொட்டாரம் உன்னிகிருஷ்ணன், "விரைவில், தோனியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவருடைய மகள் ஸிவா, கோவில் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
