தீவிர அரசியலில் இருந்து விலகிய நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே.பாண்டியன்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!!

ஒடிசா தேர்தல் தோல்விக்கு பின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே.பாண்டியன் திடீரென அரசியலில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பான விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார்.

After the Odisha election thumping, VK Pandian, an assistant to Naveen Patnaik, resigned from politics-rag

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) படுதோல்வி அடைந்ததை அடுத்து, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளர் வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளார்.

After the Odisha election thumping, VK Pandian, an assistant to Naveen Patnaik, resigned from politics-rag

வி.கே.பாண்டியன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், “அரசியலில் சேர்வதற்கான எனது நோக்கம் நவீன் பட்நாயக் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே இருந்தது. இப்போது நான் தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்" என்று வி.கே பாண்டியன் கூறியுள்ளார்.

“இந்தப் பயணத்தில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். பிஜேடியின் இழப்பில் எனக்கு பங்கு இருந்திருந்தால் வருந்துகிறேன். இதற்காக அனைத்து கட்சி தொண்டர்கள் உட்பட முழு பிஜு பரிவாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

2026ல் விஜயின் தவெகவுக்கு செக்.. கமல் உடன் திமுக போட்ட பிளான்.. குறுக்கே வந்த பாஜக + நாதக கூட்டணி..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios