Gujarat Election Result 2022: குஜராத்தில் 12ம்தேதி பதவி ஏற்புவிழா! முதல்வராக தொடர்கிறார் பூபேந்திர படேல்

குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து, வரும் 12ம் தேதி 7வதுமுறையாக ஆட்சி அமைக்கிறது.

After the BJP wins the Gujarat elections, Bhupendra Patel will take the oath of office on December 12th.

குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து, வரும் 12ம் தேதி 7வதுமுறையாக ஆட்சி அமைக்கிறது.

12ம்தேதி நடக்கும் பதவி ஏற்பு விழாவில், 2வது முறையாக முதல்வராக பூபேந்திர படேல் பதவிஏற்கிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் முழுமையாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், 182 தொகுதிகளில் ஆளும் பாஜக 152 தொகுதிகளில் முன்னிலையுடன் இருக்கிறது. இதனால், பாஜக 7வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.

After the BJP wins the Gujarat elections, Bhupendra Patel will take the oath of office on December 12th.

குஜராத் தேர்தல் முடிவு: ஆம் ஆத்மி முதல் வேட்பாளர் இசுதான் காத்வி முன்னிலை

பாஜகவின் மாபெரும் வெற்றியை மாநிலத்தில் உள்ள பாஜக தொண்டர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். கட்சி அலுவலகங்களில் தொண்டர்கள், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், ஆடிப்பாடியும் வெற்றியின் களிப்பை அனுபவித்து வருகிறார்கள்.

இதையடுத்து, தொடர்ந்து 27 ஆண்டுகளாக குஜராத்தை பாஜக ஆண்டது மேலும் தொடர்கிறது, 7வது முறையாக பாஜக ஆட்சியில் நீடிக்கிறது.

பாஜகமாநிலத் தலைவர் சிஆர் பாட்டீல் நிருபர்களுக்கு இன்று  பேட்டியளித்தார். அவர் கூறுகையில் “ வரும் 12ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு, குஜராத்தில் புதிய அரசு  பதவி ஏற்கிறது. குஜராத்துக்கு எதிரான படைகள் அனைத்தும் இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டன.

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்புவிழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.  தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் பிரதமர் மோடி விரும்புகிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நீரூபிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவி்த்தார்

மோடியின் சொந்த ஊர் தொகுதியைக் இந்த முறை கைப்பற்றுகிறது பாஜக: காங்கிரஸ் தோல்வி

After the BJP wins the Gujarat elections, Bhupendra Patel will take the oath of office on December 12th.

முதல்வர் பூபேந்திர படேல் கூறுகையில் “ மோடி மீது மக்கள்அன்பாக இருக்கிறார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குஜராத் தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்கிறோம். குஜராத் வளர்ச்சிகாக யார் பணியாற்றுகிறார்களோ அவர்களுடன் பயணிக்கவே மக்கள் முடிவு எடுத்து தேர்தலில் வாக்களி்த்துள்ளார்கள். பாஜகவில் உள்ள ஒவ்வொரு தொண்டரும் மக்கள் பணி செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்

மோடியின் சொந்த ஊர் தொகுதியைக் இந்த முறை கைப்பற்றுகிறது பாஜக: காங்கிரஸ் தோல்வி

குஜராத்தில் முதல்வராக இருந்த விஜய் ரூபானியை மாற்றிவிட்டு, படேல் சமூகத்தைச் சேர்ந்த பூபேந்திர படேலே கடந்த 2021ம் ஆண்டு பாஜக தலைமை முதல்வராக்கியது. சாதாரணத் தொண்டராகஇருந்து, படிப்படியாக வளர்ந்து நகராட்சி தேர்தலில் வென்று, பூபேந்திரபடேல் எம்எல்ஏவாகினார். அவரை முதல்வராக்கியது மிகப்பெரிய இன்பஅதிர்ச்சியாக அவருக்கு அமைந்தது.

 2021ம் ஆண்டு பூபேந்திர படேல் முதல்வராகும் முன் அவர் குறித்த விவரம் மக்களுக்கு தெரியாது, கட்சிக்குள்ளேகூட பலருக்கும் தெரிாயது. ஆனால், தேர்தலுக்கு முன் ஓர் ஆண்டு இருக்கும்போது பாஜக தலைமை திடீரென முடிவு எடுத்து பூபேந்திர படேலை முதல்வராக நியமித்தது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios