நாடு முழுவதும் 11 மொழிகளில் போஸ்டர்கள்! பிரதமர் மோடியை வெளுத்து வாங்கும் ஆம் ஆத்மி!
ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிராக 11 மொழிகளில் சுவரொட்டி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் "மோடி ஹட்டாவோ, தேஷ் பச்சாவோ" என்ற இந்தி வாசகத்துடன் போஸ்டர்களை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி பிரதமர் மோடியின் கல்வித் தகுதிகளை குறிவைத்து போஸ்டர் போரைத் தொடங்கி இருக்கிறது. இந்தியப் பிரதமருக்கு பாடம் புட்ட வேண்டுமா? கேள்வியுடன் போஸ்டர்கள் பல்வேறு பிராந்திய மொழிகளிலும் நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ளன.
இன்று (மார்ச் 30ஆம் தேதி) முதல் அனைத்து மாநிலங்களிலும் ஆம் ஆத்மி இந்த சுவரொட்டி பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. கட்சியின் அனைத்து மாநிலப் பிரிவுகளும் அந்தந்த மாநிலங்களில் சுவரொட்டிகளை ஒட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த சுவரொட்டிகள் 11 மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளன என்று டெல்லி ஆம் ஆத்மி தலைவர் கோபால் ராய் கூறியுள்ளார்.
Video: பிரதமர் மோடி படத்துக்கு முத்திட்டு நன்றி தெரிவிக்கும் வயதான விவசாயி!
கடந்த வாரம், தேசிய தலைநகர் முழுவதும் சுவர்கள் மற்றும் மின்கம்பங்களில் "மோடி ஹட்டாவோ, தேஷ் பச்சாவோ" (மோடியை அகற்றுங்கள், இந்தியாவைக் காப்பாற்றுங்கள்) என்ற சுவரொட்டிகள் காணப்பட்டன. இந்த போஸ்டர்களை ஒட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். பிரதமர் மோடியை பதவிநீக்கம் செய்யக் கோரி ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் தேசிய தலைநகரில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து டெல்லி காவல்துறை 100 க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.
பிரதமர் மோடியை குறிவைத்து ஆம் ஆத்மியின் சுவரொட்டிகளை தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு லட்சம் சுவரொட்டிகளுக்கான ஆர்டர் இரண்டு அச்சகங்களுக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இரண்டு அச்சக உரிமையாளர்களையும் டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இந்தக் கைது நடவடிக்கைக்காக பாஜகவை கடுமையாகச் சாடிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேயர்கள்கூட தங்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்யவில்லை என்று கூறினார். மேலும், இது மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கு என்றும் குற்றம் சாட்டியுள்ள அவர், ஆம் ஆத்மி போஸ்டர்களில் ஆட்சேபனைக்குரிய வகையில் என்ன இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தியைச் சும்மா விடமாட்டேன்! வழக்கு தொடரப்போவதாக லலித் மோடி சவால்!