Asianet News TamilAsianet News Tamil

sonia gandhi:smriti Irani:'எங்கிட்ட எதுவும் பேசாதிங்க'!சோனியா காந்தி, ஸ்மிருதி இரானி நேருக்கு நேர் வாக்குவாதம்

காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஜனாதிபதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேருக்கு நேர் வாக்குவாதம் செய்ததாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன

After adjournment, Sonia Gandhi and Smriti Irani square off in the Lok sabha
Author
New Delhi, First Published Jul 28, 2022, 4:05 PM IST

காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஜனாதிபதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேருக்கு நேர் வாக்குவாதம் செய்ததாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன

ஜனாதிபதி திரெளபதி முர்முவை, ராஷ்டரபதி என்று அழைப்பதற்கு பதிலாக ராஷ்ட்ரபத்னி என்று காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நாபிறழ்வால் அழைத்துவிட்டார்.

After adjournment, Sonia Gandhi and Smriti Irani square off in the Lok sabha

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் எழுப்பி காலை முதல் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேசத்திடமும், ஜனாதிபதியிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

பிரதமர் மோடிக்கு 10 கேள்விகள்: அரசர் எனக்கூறி வம்பிழுத்த ராகுல் காந்தி

ஆனால், காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெளியிட்ட வீடியோவில், “ நாபிறழ்வால் ராஷ்ட்ரபத்னி என்று பேசிவி்ட்டேன். எனக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. ஜனாதிபதியிடம் நேரம் கேட்டுள்ளேன். அவர் நேரம் அளித்ததும் அவரைச் சந்தித்து மன்னிப்புக் கோருவேன் “எ னத் தெரிவித்துவிட்டார்.

இந்தப் பிரச்சினையை மக்களவையில் எழுப்பி பாஜக பெண் எம்.பி.க்கள் கடும் அமளியில்ஈடுபட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, பிற்பகல் 12 மணிஅளவில் அவை ஒத்திவைக்கப்பட்டது

After adjournment, Sonia Gandhi and Smriti Irani square off in the Lok sabha

அப்போது, சோனியா காந்திஅவையை விட்டு வெளியேற முயன்றார். அங்கிருந்த பாஜக எம்.பி. ரமா தேவியிடம் “ எதற்காக இந்த விஷயத்தில் என்னை இழுக்கிறீர்கள். அதிர் ரஞ்சன் ஏற்கெனவே மன்னிப்புக் கேட்டுவிட்டார். இதில் என் தவறு என்ன இருக்கிறது” எனக் கேட்டார்.

ஜனாதிபதி குறித்து காங்கிரஸ் எம்.பி. ‘டங்க் ஸ்லிப்’ பேச்சு: வரிந்து கட்டும் பாஜக

அப்போது ஸ்மிருதி இரானி தலையிட்டு, “ மேடம் ஏதாவது உதவி தேவையா. நான்தான் உங்கள் பெயரை இழுத்தேன்” எனத் தெரிவித்தார்

இதைக் கேட்ட சோனியா காந்தி கோபத்துடன் “ உங்களிடம் பேச விருப்பமில்லை” என்று தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

After adjournment, Sonia Gandhi and Smriti Irani square off in the Lok sabha

காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில் “ பாஜக எம்.பி. ரமா தேவியுடன் சோனியா காந்தி அமைதியாகத்தான் பேசினார். திடீரென ஸ்மிருதி இரானி தலையிட்டு விரலை காட்டி பேசினார். அதற்கு சோனியா காந்தி “ என்ன துணிச்சல், இப்படி நடக்காதீர்கள். இது உங்கள் கட்சி அலுவலகம் அல்ல” எனத் தெரிவித்தார். அதுமட்டுல்லாமல் ஸ்மிருதி இரானியிடம் உங்களிடம் பேச நான் விரும்பவில்லை என்று சோனியா காந்தி தெரிவித்ததாக அந்த தலைவர் தெரிவித்தார்.

திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹூவா மொய்த்ரா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “நாடாளுமன்றத்தில் 75 வயது மூத்த தலைவர் அங்கிருந்து செல்லும்போது, வேறு ஒரு தலைவருடன் மாஸ்க் அணிந்து பேச முயன்றபோது, ஓநாய் பாணியில் சுற்றி வளைக்கப்பட்டார். பாஜகவின் பொய்கள், போலியானவற்றை நாளேடுகளில் படிக்க வெறுப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ பாஜக தலைவர் ஒருவரை என்னிடம் பேசாதே என்று சோனியா காந்தி தெரிவித்தார்” எனத் தெரிவித்தார். ஆனால், பாஜக தலைவர் பெயரை அவர் குறிப்பிடவில்லை

After adjournment, Sonia Gandhi and Smriti Irani square off in the Lok sabha

நீங்கள் மோடிதானே.. நீங்கள் மக்களவையில் வேலை செய்கிறீர்கள்.. பிரதமரை திகைக்க வைத்த 5 வயது சிறுமி.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மக்களவையில் இன்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடந்துகொண்ட விதம், கொடூரமான, முரட்டுத்தனமானது. விதிகள் எல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தானா” எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios