கர்நாடகாவில் ரயில் மோதி கல்லூரி மாணவி பலி: மைசூரு-ஹாசன் நெடுஞ்சாலையில் மாணவர்கள் போராட்டம்: தீவைப்பு

கர்நாடக மாநிலம், ஹாசன் அருகே கல்லூரி மாணவி மீது ரயில் மோதிய விபத்தில் அவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் மைசூரு-ஹாசன் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, டயர்களுக்கு தீவைத்தனர். 

After a train runs over a college girl in Karnataka, students block the Mysore-Hassan National Highway.

கர்நாடக மாநிலம், ஹாசன் அருகே கல்லூரி மாணவி மீது ரயில் மோதிய விபத்தில் அவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் மைசூரு-ஹாசன் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, டயர்களுக்கு தீவைத்தனர். 

ஹாசன் அருகே, குட்டத்தீரண்ணா கிராமத்தைச் சேர்ந்தவர் ப்ரீத்தி(வயது18). இவர் ஒசஹள்ளியில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று ப்ரீத்தி கல்லூரிக்குச் சென்றார்.

ரப்பர்,மேகி விலை கூடிடுச்சு.! பென்சிலை திருடுகிறார்கள்... வேதனையோடு மோடிக்கு கடிதம் எழுதிய 6 வயது சிறுமி

அப்போது ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயில்வருவதை ப்ரீத்தி கவனிக்கவில்லை. இதில் கண்இமைக்கும நேரத்தில் ரயில் ப்ரீத்தி மீதுமோதியதில் அவர் உடல்சிதறி பலியானார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸார் ப்ரீத்தி உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

After a train runs over a college girl in Karnataka, students block the Mysore-Hassan National Highway.

இதற்கிடையே ப்ரீத்தி உயிரிழந்த விவகாரம் கல்லூரி மாணவர்களுக்கு தெரியவந்தது. உடனடியாக ஹாசன்-மைசூரு நெடுஞ்சாலையில் கூடிய ஏராளமான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, மறியல் செய்தனர். சாலையில் டயர்களை கொளுத்தி எந்த வாகனத்தையும் செல்லவிடாமல் மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு.. 23 பேர் காயம்.

இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கோரி பல முறை கோரிக்கை விடுத்தோம். ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி கோஷமிட்டு மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

maan ki baat: pm modi: கவனம் ஈர்த்த கர்நாடக தேனீ வளர்ப்பு விவசாயி: பிரதமர் மோடி பாராட்டு

இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சு நடத்தினர். விரைவில் மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதியளித்தனர்.  அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios