பெங்களூரு ஏரோ இந்தியா 2023ல் கண்ணைக் கவரும் டிஆர்டிஓ தயாரிப்பான டபாஸ் ட்ரோன்!!

பெங்களூருவில் நடந்து வரும் ஏரோ இந்தியா 2023ல் ட்ரோன்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. யெலஹங்கா விமான தளத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உருவாக்கப்பட்ட டபாஸ் பிஹெச் ட்ரோன் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

Aero India 2023: DRDO TAPAS BH garnered the attention at the Yelahanka air base

தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போர், அர்மேனியா - அஜர்பைஜான் மோதல் ஆகியவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAV) தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், எல்லையில் இவர்களை எதிர்கொள்ள இந்தியாவும் ஆளில்லா விமானங்களை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. சமீப காலங்களில் பாகிஸ்தான் பல சந்தர்ப்பங்களில், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்களை ஏற்றிய ஆளில்லா விமானங்களை இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றது. இவை சுட்டு வீழ்த்தப்பட்டன.

பெங்களூரில் நடந்து வரும் ஏரோ இந்தியா 2023ல், டிஆர்டிஓ இயக்குநர் ஜெனரல்-எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் (ஈசிஎஸ்) பி.கே.தாஸிடம், டபாஸ் பிஹெச் பற்றி விரிவாக ஏசியாநெட் விவாதித்தது. எவ்வாறு போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுகிறது என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

Aero India 2023 : ஏரோ இந்தியா கண்காட்சியில் அசத்திய உலகின் மிகச் சிறிய பறக்கும் மின்சார டாக்ஸி !!

அப்போது தாஸ் கூறுகையில், "டபாஸ் என்பது ஆளில்லா ட்ரோன். இது பல்வேறு ஆய்வகங்களுடன் இணைந்து எங்கள் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது, குறிப்பாக டெல் (DEL) இதற்கான முழு தரவு இணைப்பையும் வழங்கியது. கருவிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பொறியியல் நுட்பங்களை வழங்குகிறது. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் ரேடார் டெவலப்மென்ட் எஸ்டாப்லிஷ்மென்ட் ரேடார்களை உருவாக்குகிறது. பாதுகாப்பு மின்னணுவியல் ஆராய்ச்சி ஆய்வகம் சீதோஷண நிலையை அறிவதற்கான  அமைப்புகளை உருவாக்குகிறது. இவற்றுக்கு பைலட் தேவையில்லை மற்றும் மிக உயரமான இடங்களிலும் பறந்து விரிந்து வேகமாக பறக்க முடியும். புகைப்படங்களையும் எடுக்கும்.

"இது முழுமையான மின்சாதன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. செயற்கை ரேடார் சுற்றியுள்ள அனைத்து பொருட்களையும் கண்காணிக்க முடியும். 

ஏரோ இந்தியா 2023: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதப்படை வீரர்களுக்கான உடை!

"எந்தக் கதிர்வீச்சும், டபாஸ் ட்ரோனுக்கு சிக்கல்களை உண்டாக்கும். ஆனால், அந்த கதிரியக்கத்தையும் இந்த ட்ரோன் எதிர்கொள்ளும். சுய பாதுகாப்பு தொகுப்பைக் கொண்டுள்ளது. டபாஸ் சென்சார்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. பல நாடுகள் இதை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நான் எந்த நாட்டையும் தற்போது குறிப்பிட முடியாது'' என்று தாஸ் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios