Asianet News TamilAsianet News Tamil

பருவப் பெண்கள் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்: கொல்கத்தா உயர் நீதிமன்றம்!

பருவப் பெண்கள் தங்களின் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Adolescent girls must control their sexual urges says Calcutta HC smp
Author
First Published Oct 20, 2023, 4:15 PM IST

மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை விடுதலை செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், பருவப் பெண்கள் தங்களின் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் தெரிவித்துள்ளது.

பருவ வயது பெண்கள் இரண்டு நிமிட சுகத்துக்கு இடமளிப்பதற்குப் பதிலாக தங்கள் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், மறுபுறம், பருவ வயது சிறுவர்கள் இளம் பெண்கள் உள்பட பெண்களின் கண்ணியம் மற்றும் உடல் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் எனவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

17 வயதான சிறுமியுடன் காதல் கொண்டு அவரது சம்மதத்துடன் உடலுறவு  வைத்துக் கொண்ட 19 வயது கல்லூரி மாணவர்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு கீழமை நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அந்த மாணவன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அந்த வழக்கானது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள் சித்த ரஞ்சன் தாஷ் மற்றும் பார்த்த சாரதி சென் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது மைனர் பெண்ணுடன் காதல் விவகாரங்கள் கொண்ட அந்த மாணவரை விடுவித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இளம்பெண்கள், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள், சிறுவர்களின் கடமைகளையும் தொகுத்து வழங்கினர்.

கிரியாத் ஷ்மோனா நகரை காலி செய்ய இஸ்ரேல் ராணுவம் உத்தரவு!

பருவப் பெண்களுக்கு உணர்ச்சிகள் ஏற்படுவது இயல்பானது. ஆனால், அதனை கட்டுப்படுத்த வேண்டும். வெறும் 2 நிமிட மகிழ்ச்சிக்காக சமூகத்தின் பார்வையில் பலவீனமடைந்து விடக் கூடாது. அதேபோல், பெண்களின் கண்ணியம், தனியுரிமை, உடல் சுதந்திரத்தை இளைஞர்கள் மதிக்க வேண்டும் எனவும், அதற்கு அவர்களை பயிற்றிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

முன்னதாக, வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமி ஆஜராகி, தனது விருப்பத்துடன் தான் அந்த இளைஞன் உடலுறவு வைத்ததாகவும், அதன் பின்னர் தாங்கள் திருமணமும் செய்து கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். அதன்பிறகு, அந்த மாணவனின் தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios