adityanath put 50 orders within 150 hours

உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற 150 மணி நேரத்தில் 50 அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பின் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. கோர்க்பூர் தொகுதி எம்.பி.யான யோகி ஆதித்யநாத் முதல்வராக அங்கு பதவி ஏற்றுள்ளார். இவர் பதவி ஏற்றதில் இருந்து அதிரடியாக நாள்தோறும் புதிய புதிய உத்தரவுகளையும், நிர்வாக சீர்திருத்தங்களையும் செய்து வருகிறார். ஆனால், இதுநாள் வரை ஒருமுறை கூட அமைச்சரைக் கூட்டத்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி ஆதித்யநாத் பிறப்பித்த அதிரடியான உத்தரவுகள் என்னென்ன?

1. சட்டவிரோத மாட்டிறைச்சி வெட்டும் கூடங்களை மூடுவது.

2. பெண்களை பாதுகாக்கும் வகையில், தொல்லை கொடுப்பவர்களைப் பிடிக்க ‘ஆன்ட்டி ரோமியோ’ படை அமைத்தல்

3.மக்கள் அதிகமாக கூடும் சந்தைகள், காய்கறி விற்பனைக்கூடங்களை சுத்தமாக பராமரித்தல்.

4. பெண்கள்,பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிராக ஈஸ் டீசிங் செய்பவர்களை கடுமையாக தண்டித்தல்.

5. அனைத்து அரசு அதிகாரிகளும் சரியாக காலை 10 மணிக்கு அலுவலகத்துக்குள் இருக்க வேண்டும்.

6. அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் முறையிலான வருகைப்பதிவேடு முறை நடைமுறை

7.பணிநேரத்தில் அதிகாரிகள் பான்மசாலா, குட்கா மெல்ல தடை

8. அலுவலகங்களை மிகவும் சுத்தமாக பாரிமரிக்க வேண்டும்.

9. ஜூன் 15-ந் தேதிக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியும் இல்லாமல் செப்பணிடப் பட வேண்டும்.

10. அரசு அலுவலகத்துக்கு புகார் கடிதங்கள், மனுக்களுடன் வரும் மக்களுக்கு மிகவிரைவில் தீர்வு கிடைக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளும் மாதந்தோறும் தனது துறை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

12. அலகாபாத், மீரட், ஆக்ரா, கோரக்பூர், மற்றும் ஜான்சி ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் கொண்டு வருதல்.

13. அரசு அதிகாரிகள் யாரும் கோப்புகளை வீட்டுக்கு எடுத்துச்செல்லக்கூடாது.

14. அரசியல்வாதிகளின் பாதுகாப்பு மறு ஆய்வு செய்யப்படும்.

15. அரசு அதிகாரிகள், பணியாளர்கள், அமைச்சர்கள் அனைவரும் சொத்துக்கணக்கை தெரிவிக்க வேண்டும்.

16.அனைத்து கூட்டுறவு பண்டசாலைகளும் செயல்பட வேண்டும்.

17. பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ‘டி சர்ட்’கள் அணிந்து வரக்கூடாது.

18. பள்ளியில் அவசியம் இல்லாமல், ஆசிரியர்கள் செல்போன்கள் பயன்படுத்தக்கூடாது.

19. மானசரோவர் ஆன்மீகத் தளத்துக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு மானிய தொகையாக ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும்.

20. மானசரோவர் பவன் என புதிதாக கட்டிடம் கட்டப்படும், பயணிகள் தங்க வசதி செய்யப்படும்.

21. அரசு பொதுப்பணிகள், ஒப்பந்தப்பணிகளில் கிரிமினல்கள் யாருக்கும் வாய்ப்பு அளிக்கக் கூடாது.

22. பாரதியஜனதா கட்சியினர், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் அவர்களின் உறவினர்கள் யாரும் அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது.

23. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் வரவேற்பரை உருவாக்கப்பட்டு, அதில் பெண் போலீஸ், ஆண்போலீஸ் நியமிக்கப்பட வேண்டும். படிப்படியாக பெண் போலீஸ் எண்ணிக்கை உயர்த்தப்படும்.

24. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சுத்தமான குடிநீர் கிடைக்க வகை செய்தல்.

25. அரசுஅலுவலகங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமிரா பொறுத்துதல்.

26 மக்களின் முக்கியத் திருவிழாக்களின் போது, தடையில்லா மின்சாரம் வழங்குதல் என 50 வகையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.