ஆதித்யா எல்1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை உயரம் அதிகரிப்பு - இஸ்ரோ தகவல்!

ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல் புவி சுற்றுவட்டப் பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது

Aditya L1 Mission Earth bound maneuvre increased and  satellite is healthy says isro smp

சந்திரயான்-3 தரையிறக்கத்தின் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அடுத்ததாக சூரியனை ஆராய்ச்சி செய்யும் ரூ.424 கோடி மதிப்பிலான ஆதித்யா எல்1 செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹிரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி எக்ஸ்எல் சி57 ராக்கெட்டின் மூலம் நேற்று காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 செயற்கைகோள்  வெற்றிகரமாக புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல் புவி சுற்றுவட்டப் பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, 245 கிமீ x 22459 கிமீக்கு சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய சுற்றுப்பாதையில் தற்போது ஆதித்யா எல் 1 சுற்றி வருகிறது. அடுத்த சுற்றுப்பாதை உயர்வு வருகிற 5ஆம் தேதி மேற்கொள்ளப்படும் எனவும் இஸ்ரோ  தெரிவித்துள்ளது.

மேலும், ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் ஆரோக்கியமாக செயல்பட்டு வருகிறது எனவும் இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. படிபடியாக மூன்று சுற்று பாதை உயர்த்தப்பட்டு சூரியனுக்கும் புவிக்கும் நடுவில் உள்ள லேக்ரேஞ் (எல்1) புள்ளியில் ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

 

 

முன்னதாக, பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லேக்ரேஞ் புள்ளியை (L1) ஆதித்யா எல்1 செயற்கைகோள் அடைய 125 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே Lagrange point எனப்படும் ஐந்து புள்ளிகள் உள்ளன. இந்த புள்ளிகளில் நிலவும் சமநிலை காரணமாக, இங்கு வைக்கப்படும் பொருள் சூரியனால் ஈர்க்கப்படாது. அந்த புள்ளிகளில் நிலைநிறுத்தப்படும் பொருட்களுக்கு சூரியனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதன்படி, லேக்ரேஞ் புள்ளி 1 (எல்1)-இல், இஸ்ரோவின் ஆதித்யா எல்1 செயற்கைகோள் நிலைநிறுத்தப்படவுள்ளது.

இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம்: இடைநிறுத்திய கனடா!

ஆதித்யா எல்1 செயற்கைகோள் மொத்தம் 7 பேலோடுகளை சுமந்து சென்றுள்ளது. இதில் 4 பேலோடுகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும். 3 பேலோடுகள் சூரியனின் வெளிப்பகுதி, துகள்கள், எல்-1 பகுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios