Aditya-L1: சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலம்.. இன்று விண்ணில் ஏவப்படுகிறது - 10 முக்கிய தகவல்கள்.!!
சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராயும் ஆதித்யா-எல்1 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இது தொடர்பான கவுன்டவுன் நேற்று தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அடுத்தடுத்து பல்வேறு முக்கிய விண்வெளி ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அண்மையில் வெற்றி பெற்ற சந்திரயான் 3 திட்டம் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெருமையை தேடி தந்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது சூரியனை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது இஸ்ரோவின் மிக முக்கிய ஆராய்ச்சி முயற்சியாக உள்ளது. மற்ற கோள்கள் குறித்த ஆய்வு போல் இல்லாமல் சூரியனை நோக்கி மேற்கொள்ளப்படும் ஆய்வு அதனின் சக்தி குறித்து அறிய உதவும்.
ரூ.10க்கு 1000 ஜிபி டேட்டா.. இலவச அழைப்புகள்.. பிஎஸ்என்எல்லின் சூப்பரான ரீசார்ஜ் திட்டம்
இதன் மூலம் சூரியனால் நமக்கு ஏற்படவிருக்கும் அபாயங்கள் குறித்து தெரிந்துகொள்ள இயலும். மேலும், சூரிய கதிர் வீச்சு, வெப்பநிலை, காந்த புலம் போன்றவற்றைக் குறித்து தெரிந்துகொள்ள முடியும். இன்று (செப்டம்பர் 2) ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவுத்தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி- 57 ராக்கெட் மூலம் காலை 11.50 மணிக்கு ஏவவுள்ளனர்.
பூமியில் இருந்து 15 கோடி கிமீ தூரத் தொலைவில் சூரியன் இருக்கிறது. விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல் 1 விண்கலம் ”லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்” என்ற இடத்தில் நிலைநிறுத்தபடும். புவியின் நீள்சுற்றுவட்டப் பாதையில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் ’லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்ற பகுதிக்கு செலுத்தப்பட்டு அங்கிருந்து சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளனர்.
குட் நியூஸ்.. எஃப்டிக்கு 8%க்கும் அதிகமாக வட்டியை உயர்த்திய 3 வங்கிகள்.. என்னென்ன தெரியுமா.?
சூரிய ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா- எல்1 சுமார் 1,475 கிலோ எடை கொண்டது. இதில் சோலார் அல்ட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசர், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் உள்ளிட்ட 7 வகையான ஆய்வு கருவிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2000 Note : உங்களிடம் 2000 ரூபாய் நோட்டு இருக்கா.? உடனே ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பை பாருங்க !!