adhar is compulsary for employers attendance
ஆதார் இல்லாமல் இனி ஒரு அணுவும் அசையாது என்ற நிலை ஏற்பட ரொம்ப நாள் இல்லை என்றே கூறலாம் ....
வங்கி கணக்கு முதற்கொண்டு, ரேஷன் கார்டு, பாண் எண் மொபைல் உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது
இந்நிலையில்,ஆதார் எண் இணைப்பு மூலம் தனி மனித ரகசியத்திற்கு ஆபத்து என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து ஆதார் எண் இணைப்பிற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிக்கு தாமதமாக வராமல் தடுக்கவும், உரிய நேரத்துக்கு வருவதற்காகவும் ரயில்வே வாரியம் ஆதார் அடிப்படையிலான வருகைப்பதிவு முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நாட்டின் மிக பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையில், நிர்வாக சீர்கேடு மற்றும் ஆட்கள் சரியான நேரத்தில் வேளையில் இல்லத்தால் ஏற்படும் விபத்துக்கள் என தொடர்ந்து அதிகரித்து வருகிறது
இதனை சரி செய்யும் பொருட்டு, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தாமதமாக பணிக்கு வருவது, வேலை செய்யாமல் ஏமாற்றுவது உள்ளிட்ட பல காரணங்களை கண்டறிந்த அதிகாரிகள் இது குறித்து அறிக்கை சமர்பிக்கவே, ஆதார் அடிப்படையிலான வருகைப்பதிவு முறையை கொண்டு வரலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது
இந்த மாதம் 30-ந் தேதிக்குள் ஆதார் அடிப்படையிலான வருகைப் பதிவு முறை நடைமுறைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து அனைத்து ரயில்வே மண்டலங்களிலும், அலுவலகங்களிலும் வரும் ஜனவரி 31-ந் தேதிக்குள் இந்த வருகை பதிவு முறை அமலுக்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.....
