adar is compulsary to get Laddu in thituppathi

திருப்பதி அருள்மிகு ஏழுமலையான் கோவிலில் இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும் என்று தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது

வருமானவரி தாக்கல், உரம் வாங்குதல, விமான பயணம் உள்ளிட்டவைகளுக்கு ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டியமாக்கியுள்ளது. 

விமானம் பயணம். ரயில் பயணம், அரசு சலுகைகள் என அனைத்து தேவைகளுக்கும் ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு கட்டாயமாகியுள்ளது.

இதற்கு மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே லட்டு வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

மேலும் லட்டு, தரிசன டிக்கெட் உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதாரை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு தரிசனத்துக்காக மென்பொருள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.