Asianet News TamilAsianet News Tamil

வங்கிகளில் இனி ஆதார் மையங்கள்….ஆதார் அட்டை வழங்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை…

adar centre in banks
adar centre in banks
Author
First Published Jul 14, 2017, 6:16 AM IST


பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் ஆதார் அட்டை வழங்கும் மையங்களைத் தொடங்க வேண்டுமென்று   Unique Identification Authority of India  எனப்படும்  இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம்  பேசிய ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே ஆதார் அட்டை வழங்குவதற்காக இப்போது நாடு முழுவதும் 25,000 மையங்கள் செயல்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

adar centre in banks

ஆதார்  மையங்கள் அனைத்துமே தங்களுக்கென்று தனி இடத்தில்தான் இயங்கி வருகின்றன. வங்கி வளாகத்துக்குள் எந்த மையமும் செயல்படவில்லை என தெரிவித்துள்ளார்.

.இது தொடர்பாக அனைத்து பொதுத் துறை, தனியார் வங்கிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், தன்படி, வங்கிக் கிளைகளில் ஆதார் அட்டை வழங்கும் மையத்தை அமைக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

adar centre in banks

இந்த மையங்கள் பொதுமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது மட்டுமின்றி, ஏற்கெனவே பெறப்பட்ட ஆதார் அட்டையில் திருத்தங்கள் இருந்தால் அந்தப் பணிகளையும் மேற்கொள்ள உதவும்.

நாடு முழுவதும்  1,20,000 வங்கிக் கிளைகள் உள்ளன. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இவற்றில் 10-ல் ஒரு வங்கிக் கிளையில் அதாவது 12 ஆயிரம் வங்கிக் கிளைகளில் ஆதார் மையங்களை தொடங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

adar centre in banks

புதிதாகக் தொடங்கப்படும் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமன்றி, ஏற்கெனவே உள்ள வங்கிக் கணக்குகளுக்கும் ஆதார் எண்ணை இந்த ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமாகியுள்ளதால் வங்கிகளில் ஆதார் மையங்கள் செயல்பட்டால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்,

வங்கிக் கிளைகளில் ஆதார் மையங்கள் செயல்படுவதும் மிகவும் பாதுகாப்பானது என்றும். ஆதார் அட்டை வழங்க பணம் பெறுவது உள்ளிட்ட தவறுகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும் என்றும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணைய செயல் தலைவர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios