பங்குகள் வீழ்ச்சி பற்றி அதானி குழுமத்திடம் விசாரணை நடத்தப்படும் என எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் தெரிவித்துள்ளார்.
பங்குகள் வீழ்ச்சி பற்றி அதானி குழுமத்திடம் விசாரணை நடத்தப்படும் என எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக அதானி குழுமம் தங்கள் பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்ட மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்கவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியது. இதை அடுத்து அதானி குழுமம் மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின. இதனிடையே அதானி குழுமத்தின் பங்குகளில் எல்ஐசி, கடந்த ஜன.27ம் தேதி நிலவரப்படி ரூ. 36,474.78 கோடி முதலீடு செய்துள்ளது.
இதையும் படிங்க: அதானி நிறுவனம் மீதான புகார் விவகாரம்... செபி பதிலளிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்!!
அதாவது சதவீத அடிப்படையில் மொத்த பங்குகளில் 4.23 சதவீதமாகும். மேலும் அதானிகுழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கி வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் சரிவடைந்தது. இந்த நிலையில் பங்குகள் வீழ்ச்சி பற்றி அதானி குழுமத்திடம் விசாரணை நடத்தப்படும் என எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Cow Hug Day-க்கு நாடு முழுவதும் கண்டனம்... அறிவிப்பை திரும்பப்பெற்றது இந்திய விலங்குகள் நல வாரியம்!!
இதுகுறித்து எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் கூறுகையில், நெருக்கடியில் சிக்கியுள்ள அதானி குழுமத்தின் உயர்மட்ட அதிகாரிகளை, எல்ஐசி நிர்வாக குழு விரைவில் சந்திக்கும். அப்போது அதானி குழுமம் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து விளக்கம் கேட்கப்படும். அதானி குழுமத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அவர்கள் எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதையும் கேட்டறிவோம். இருப்பினும், எல்ஐசி மற்றும் அதானி குழும அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு குறித்த காலக்கெடுவை தற்போது கூற இயலாது என்று தெரிவித்துள்ளார்.
