Asianet News TamilAsianet News Tamil

விஷால் அலுவலத்தில் ரெய்டு ஏன் தெரியுமா? சொல்கிறார் பிரபல நடிகர்..!

Actor Mayilasamy has said that she has been rayed at her office due to Vishals support in Mersal.
Actor Mayilasamy has said that she has been rayed at her office due to Vishals support in Mersal.
Author
First Published Oct 24, 2017, 1:33 PM IST


மெர்சல் பட விவகாரத்தில் விஜயை விஷால் ஆதரித்த காரணத்தால்தான் அவரது அலுவலத்தில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாக நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்டி குறித்து விமர்சித்து கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அரசியல்வாதிகள் தணிக்கை செய்தால் தணிக்கை குழு எதற்கு என கேள்வி எழுப்பினார். 

விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். 

இந்நிலையில், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் மத்தியகலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் நேற்று 3 மணி முதல் 6 மணி வரை சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, நிறுவனத்தை சேர்ந்த விஷால் மற்றும் மேலாளர்கள் யாரும் அங்கு இல்லை.  விஷால் தயாரிப்பு நிறுவனம் ஜி.எஸ்.டி வரியை முறையாக செலுத்தியுள்ளார்களா என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.ஆனால் ஜிஎஸ்டி அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், வருமான வரி தாக்கல் செய்தது தொடர்பாக தனது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மயில்சாமி கலந்துகொண்டார். 

அப்போது மெர்சல் விவகாரத்தில் விஜய்க்கு விஷால் ஆதரவு அளித்த ஒரே காரணத்திற்காகத்தான் விஷால் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டதாகவும் விஷால் வீட்டுக்கு மட்டுமல்ல நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் வீட்டிலும் ரெய்டுக்கு போயிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கின்றது எனவும் பிரதமர் மோடி உலகை சுற்றியதற்கு பதிலாக இந்தியாவை சுற்றி வந்திருந்தாலாவது சாலைகள் தரமாக இருந்திருக்கும் எனவும் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios