ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வருமான வரித்துறையில் இருந்து உடனே உங்களை தேடி நோட்டீஸ் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் ஆட்டம் ஆரம்பமானது என பொதுமக்கள் புலம்புகின்றனர்.

1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம தேதி பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். அன்றாட தேவைகளுக்கே பணத்தை பயன்படுத்துவது இயலாத காரியமாக மாறியது.

தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகள் முன், நீண்ட வரிசையில் தினமும் அதிகாலை முதல் காத்திருக்கும் காட்சிகள் நடந்து வருகிறது.

வடமாநிலங்களில் மிக அதிக அளவில் ஏடிஎம் மையங்களிலோ, வங்கி கிளைகளோ இல்லாத்தால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சாதாரண மக்களின் நிலை இப்படி என்றால், ஓரளவு வசதி படைத்தவர்கள், பணத்தை மாற்றுவதற்கு வழி தெரியாமல் அலைகின்றனர்.

வங்கியில் ஒருவரதுபெயரில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு அதிகப்பட்டசமாக ரூ.2.5 லட்சம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. அதற்கு மேல், டெபாசிட் செய்தால், உரிய விளக்கம், சரியான காரணம் இல்லாமல் இருந்தால், அந்த பணத்துக்கு உரிய வரியும், 200 சதவீத அபராதமும் விதிக்கப்படும் என சக்திகாந்ததாஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் அதிகளவில் பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு, தற்போது வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. அதில் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் இவ்வளவு தொகை டெபாசிட் செய்துள்ளீர்கள். அந்த பணம் வந்ததற்கான ஆதாரம், கடந்த 2 ஆண்டுகளில் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகள் ஆகியவற்றை எடுத்து கொண்டு, அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

தற்போது இத்தகைய நோட்டீஸ்கள், வருமான வரித்துறையினரால், அனைவருக்கும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களே, உங்களுக்கும் நோட்டீஸ் வரலாம். தயாராக இருங்கள்…