நேற்று பாகிஸ்தானின் அதிநவீன போர் விமானமான எப் - 16 விமானங்கள், இந்திய எல்லைக்குள் அத்துமீறி 7 கி.மீ., தூரம் நுழைந்தன. இந்தியாவில் 4 இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி செய்து அது தோல்வியில் முடிந்தது. 

பாகிஸ்தான் விமானங்கள், இந்திய பகுதிக்குள் நுழைந்ததை பார்த்ததும், அங்கிருந்த நமது மிக் 21 போர் விமானங்கள் உடனடியாக பாகிஸ்தான் விமானங்களை துரத்தத் தொடங்கின.

இதனையடுத்து எப் - 16 விமானங்கள் அலறியடித்துக் கொண்டு மீண்டும் பாகிஸ்தானுக்குள் திரும்பின. ஆனாலும் நமது போர் விமானங்கள் அவற்றை விடாமல் துரத்திச் சென்றன. அப்போது அபிநந்தன் சென்ற மிக்- 21 போர் விமானம், எப் - 16 விமானங்களுக்கு இடையே சிக்கி கொண்டது.

அப்போது அபி நந்தனின்  விமானம் தாக்கப்பட்டது. தாக்கப்பட்ட விமானம் நொறுங்கி விழுவதற்கு முன்னர், அபிநந்தன், ஆர் 73 ஏவுகணை மூலம் எப் - 16 விமானத்தை தாக்கினார். பழைய மிக் போர் விமானத்திலிருந்து, அதிநவீன போர் விமானமான எப் -16 விமானத்தை தாக்கியது அரிதிலும் அரிதான சம்பவமாக கருதப்படுகிறது.
 
இதையடுத்து தனது விமானத்திலிருந்து குதித்த அபிநந்தன், காற்றின் வேகம் காரணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இறங்கினார். பாகிஸ்தான் விமானியும், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இறங்கினார்.

இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் அவி நந்தன் இது இநதியாவா ? அல்லது பாகிஸ்தானா ? என கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் இது பாகிஸ்தான் என்று சொல்லி அபி நந்தனை தாக்கத் தொடங்கினர்.. ஆனால் அங்கு பாகிஸ்தான் வீரர்கள் வந்து அவரை மீட்டு ராணுவ முகாமுக்கு கொண்டு சென்றனர். 

தனது விமானம் சுடப்பட்டு கீழே விழப்போகிறது என்று தெரிந்தும் சமயோசிதமாக பாகிஸ்தான் எப்-16 விமானத்தை அபி நந்தன் சுட்டு வீழ்த்திய வீரத்தை ராணுவ அதிகாரிகள் பாராட்டித் தள்ளியுள்ளனர்.