இந்தியாவில் நல்லது நடந்தால் மோடினாமிக்ஸ் கெட்டது நடந்தால் நிர்மலானாமிஸ் என பாஜகவை காங்கிரஸ் மூத்த தலைவரான அபிஷேக் சிங்வி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய தேக்கம் உருவாவதற்கு ஊபர், ஓலா நிறுவனங்கள் காரணமாக இருக்கின்றன. மக்கள் சொந்தமாக கார் வாங்குவதற்கு பதிலாக இதுபோன்ற கார்களில் பயணிக்க விரும்புகிறார்கள்’ என கூறியிருந்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்த விளக்கம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிங்வி கூறுகையில், ‘பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை பின்தொடர்பவர்கள் 50 மில்லியனை தாண்டிவிட்டனர். பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களை தாண்டிவிடும் என்றால் எப்படி? இளைஞர்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இதற்கும் எதிர்கட்சிதான் காரணம் என கூறுவீர்களா? ஊபர், ஓலாதான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டார்களா?

எது நல்லது நடந்தாலும், எங்களால் செய்யப்பட்டுள்ளது மோடினாமிக்ஸ். எது கெட்டது நடந்தாலும், மற்றவர்களால் நிர்மலானாமிக்ஸ் செய்யப்பட்டது. பிறகு, மக்கள் உங்களை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? (பப்ளிக்னாமிக்ஸ்)’ என பதிவிட்டுள்ளார்.