மாணவர்களின் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்கும் போது, அதில் அவர்களின் புகைப்படம், ஆதார் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழங்களுக்கு பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய மனித வளத்துறைஇணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே கூறுகையில், “ மாணவர்கள்  இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தபின் வழங்கப்படும் சான்றிதழ்களில் அவர்களின் புகைப்படம், ஆதார் எண் ஆகியவற்றை பல்கலைக்கழங்கள் குறிப்பிட வேண்டும். 

அதுமட்டுமல்லாமல், எந்த வழிக்கல்வியில் அதாவது ரெகுலர், பகுதிநேரம், அல்லது தொலைதூரக் கல்வியில் படித்தாரா என்பதையும் சான்றிதழ்களில் குறிப்பிட வேண்டும் என்று பல்கலைக்கழங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி அனைத்து பல்கலைக்கழங்களுக்கும் அறிவிக்கை அனுப்பப்பட்டு, இந்த முறையை பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.