பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை கால அவகாசம் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால் பான் கார்டு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1-ந்தேதிக்கு பின் வருமானவரி கணக்கு ரிட்டன் தாக்கல் செய்பவர்கள் கண்டிப்பாக தங்களின் பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்து இருப்பது கட்டாயமாகும் எனவும், அவ்வாறு இணைத்து இருப்பவர்கள் மட்டுமே ரிட்டன் தாக்கல் செய்ய முடியும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்பவர்கள் பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஜூன் 30 ஆம் தேதியே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை கால அவகாசம் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5 ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டித்ததையடுத்து ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.