Asianet News TamilAsianet News Tamil

ஆதார் இணைப்பு காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிப்பு...அனுமதி வழங்கியது நீதிமன்றம்!

Aadhaar linking dates extended to 2018 March 31
Aadhaar linking dates extended to 2018 March 31
Author
First Published Dec 15, 2017, 5:09 PM IST


செல்போன் எண்கள், வங்கிக் கணக்குகளில் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்த கூடாது என மத்திய அரசுக்கு அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு வரும் ஜனவரி 17 முதல் விசாரிக்கவுள்ளது.

இதனிடையே அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண் இணைப்பைக் கட்டாயம் ஆக்கி இருப்பதற்கு தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட் அமர்வின் முன் விசாரிக்கப்பட்டு வந்தன. இதன் முன்னர் மத்திய அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவற்றில் ஆதார் எண் இணைப்பதற்கு டிசம்பர் 31 கடைசி என்பதை 2018 மார்ச் 31 கடைசி என்று நீட்டித்து மத்திய அரசு உத்தரவிடும் என்று தெரிவித்தார். அவர் தெரிவித்திருந்த படி, மத்திய அரசும் புதன் கிழமை இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.  

இந்நிலையில்  இன்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.  ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டதற்கு அனுமதி வழங்கிய அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள், அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்த கூடாது என அந்த இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டனர். 

இதன்படி, செல்போன் எண்கள், வங்கிக் கணக்குகளில் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவும் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios