Asianet News TamilAsianet News Tamil

இனி செல்போனிலேயே ஆதார் - வந்துவிட்டது புதிய 'ஆப்'!!

aadhaar in smartphones
aadhaar in smartphones
Author
First Published Jul 19, 2017, 3:49 PM IST


ஆதார் அட்டை என்று தனியாக எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.ஸ்மார்போனிலேயே ஆதாரை எப்போதும் வைத்து இருக்கும் வகையில் மொபைல்ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அனைவரும் ஆதார்  எண் எடுக்கவும் வலியுறுத்தி வருகிறது. இதுவரை 80 கோடி பேர் வரை ஆதார் எண் பெற்றுள்ளனர்.

மக்களுக்கும் இன்னும் கூடுதல் வசதி அளிக்கும் வகையில், ஆதார் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு, புதிய ஆப்ஸ்(செயலி) வெளியிட்டுள்ளது. அந்த செயலி மூலம் ஒருவர் தனது ஆதாரை பதவிறக்கம் செய்து கொண்டு தேவைப்படும் போது அதை ஆவணமாக பயன்படுத்தலாம்.

இந்த ஆப்ஸ் தற்போது, ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வைத்து இருப்பவர்கள் கூகுள்  ப்ளேஸ்டோரில் சென்று, ‘எம்.ஆதார்’ என்ற ஆப்ஸைபதவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இந்த ஆப்ஸை பதிவிறக்கம் செய்தபின், அதில் ஒருவர் தன்னுடைய ஆதார் எண்ணை பதிவு செய்தபின், நாம் ஆதார் எண்ணில் கொடுத்த செல்போன்எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி. பாஸ்வேர்ட் வரும். அந்த பாஸ்வேர்டை பதவு செய்தால், ஆதார் குறித்த விவரங்களை காண முடியும். மேலும், இந்த செயலியில் இருந்து ஆதார் தொடர்பான விவரங்களை மற்றவர்களுக்கும் அனுப்பவும் முடியும்.

இந்த செயலியை யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு பீட்டா தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், இதை பயன்படுத்துவதில் சில பிரச்சினைகள் ஏற்படுத்துவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். அதை சரிசெய்து தற்போது நவீனமாக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios