Aadar Number connects with Driver License
ஆதார் எண்ணை, ஓட்டுநர் உரிம எண்ணுடன் இணைப்பது பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் விவாதித்து வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்தி வெளி மாநிலங்களுக்கு தப்பிச் செல்லும் நபர்களை எளிதில் பிடிக்க இந்த நடைமுறை உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
அரியனா மாநிலத்தில் கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, ஓட்டுநர் உரிமத்துடன், ஆதாரை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருக்கிறது. அரசு சேவைகளுக்கும் சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்குகள், பான் கார்டு, ஓய்வூதியம், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுநர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் எரிவாயு மானியம், பரஸ்பர நிதி முதலீடுகள் போன்றவற்றை பெற ஆதார் எண் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
