aadar attendance for railway employees

ரெயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிக்கு தாமதமாக வராமல் தடுக்கவும், உரிய நேரத்துக்கு வருவதற்காகவும் ரெயில்வே வாரியம் ஆதார் அடிப்படையிலான வருகைப்பதிவு முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்திய ரயில்வே துறை நாட்டில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். இந்த துறையில் தொடர்ந்து விபத்துகள் நிகழ்வதோடு, நிர்வாக சீர்கேடுகளும் இருப்பதாக பரவலாக கருத்து நிலவுகிறது,

இதற்கு முக்கிய காரணமாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தாமதமாக பணிக்கு வருவது, வேலை செய்யாமல் டிமிக்கி கொடுப்பது என கூறப்படுகிறது. இதைத் தடுக்கவும்இ ஊழியர்களை சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதை உறுதி செய்யவும் ஆதார் அடிப்படையிலான வருகைப்பதிவு முறையை தொடங்கவுள்ளது.

அதாவது கைரேகை மற்றும் கருவிழிப்படல பதிவு முயையை நடைமுறைப்படுத்த ரயில்பே துறை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் ரெயில்வே வாரியம் கடிதம் எழுதி உள்ளது. இதன்படி முதல்கட்டமாக அனைத்து ரெயில்வே டிவிசன் அலுவலகங்கள், மெட்ரோ ரெயில் கொல்கத்தா, ரெயில்வே பணிமனை, ரெயில் பெட்டி தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் இந்த மாதம் 30-ந் தேதிக்குள் ஆதார் அடிப்படையிலான வருகை பதிவு முறை நடைமுறைக்கு வருகிறது. 

அதைத் தொடர்ந்து அனைத்து ரெயில்வே மண்டலங்களிலும், அலுவலகங்களிலும் வரும் ஜனவரி 31-ந் தேதிக்குள் இந்த வருகை பதிவு முறை அமலுக்கு வந்து விடும்.

தற்போது இந்த வருகை பதிவு முறை ரெயில்வே வாரியம் மற்றும் சில ரெயில்வே மண்டல அலுவலகங்களில் நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.