Asianet News TamilAsianet News Tamil

பெண் ஊழியர்களை ஆபாச படம் எடுத்த வாலிபர்... பெங்களூர் ஐடி’யில் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்..

A young man taking photos and videos of women workers on his cellphone
A young man taking photos and videos of women workers on his cellphone
Author
First Published Jan 24, 2018, 11:33 AM IST


பெங்களூரில் ஐடியில் கம்பெனியில் பணியாற்றும் பெண் ஊழியர்களை ஆபாச கோணத்தில் செல்போனில் படம் எடுத்த துப்புரவு ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பெங்களூர் இந்திராநகரிலுள்ள, முன்னணி சாப்ட்வேர் கம்பெனியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தர்மேந்திர குமார் யாதவ் என்பவர் அந்த நிறுவனத்தில் துப்புரவு வேலை வேலை பார்த்து வந்தார். செல்போனில், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை பல்வேறு கோணங்களில் ரகசியமாக படம் பிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். வேலைக்கு வரும் பெண்கள் வீட்டுக்கு சென்ற பிறகு அதை பார்த்து ரசிப்பதும், நண்பர்களுக்கும் அவற்றை ஷேர் செய்து அந்த பெண்களை பற்றி ஆபாசமாக பேசுவது என வழக்கமாக இதே வேலையே செய்துள்ளார்.

 

இந்நிலையில், நேற்று முன்தினம், வேலை செய்யும் பெண்களை கையில் செல்போன் வைத்துக்கொண்டு ரகசியமாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் கையில் போன் வைத்து படமெடுப்பதை கவனித்துக் கொண்டிருந்த ஒரு பெண் ஊழியர். இதுகுறித்து சக ஊழியர்களுக்கு சொல்லியுள்ளார். இந்த செயலை கண்ட மற்ற பெண்கள் சேர்ந்து, தர்மேந்திர குமாரை கையும் களவுமாக பிடித்து, செல்போனை பிடுங்கினர். செல்போனின் கேலரியை பார்த்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில், அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களை ஆபாசமாக பல்வேறு கோணங்களில் எடுத்த பெண் ஊழியர்கள் போட்டோக்கள் அதில் இருந்துள்ளது. அதுமட்டுமல்ல, சில பெண் ஊழியர்கள் பாத்ரூமுக்கு சென்றபோது உள்ளேயிருந்து பதிவான வீடியோக்களும் இருந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அதுமட்டுமல்ல, சுத்தம் செய்ய செல்லும்போது உள்ளே செல்போனை ரகசியமாக கழிவறைக்குள் வைத்துவிட்டு பெண்களை வீடியோ எடுத்திருப்பது அம்பலமானது.

இதுகுறித்து சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354சி-ன்கீழ், துப்புரவு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

கதுக்குப்பின் விசாரணை நடத்தியதில், இந்த புகைப்படங்கள் வீடியோக்கள்  அனைத்தும், டிசம்பர் 20 முதல் ஜனவரி 11ம் தேதிக்குள் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios