பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர்,  இருசக்கர வண்டியின் பெட்ரோல் டங்க் முன்பகுதியில்,  கன்று குட்டி ஒன்றை அமரவைத்து ஓட்டி சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக  நாய், பூனை, போன்ற சிறிய விலங்குகளை வண்டியின் முன் பக்கம் அமரவைத்து வைத்துக் வெளியில் அழைத்து செல்வது வழக்கம். ஆனால் ஒருவர் சற்று வித்தியாசமாக , நன்கு வளர்ந்த கன்று குட்டி ஒன்றை வெள்ளை துணியால் போத்தி, முன்பகுதியில் அமர வைத்து அழைத்துச் சென்ற சம்பவம் அனைவரையும் வியக்கவைத்தது.

இதனை பார்த்த சிலர், அந்த காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த  பலர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  இது விலங்குக்கு துஷ்பிரயோகம் எனக் கூறியும் இதனால் விபத்து ஏற்படும் ஆபத்து அதிக அளவில் உள்ளதாகவும் கூறி உள்ளனர்.

அந்த வீடியோ இதோ: