Year Ender 2022: பாஜக சிம்மசொப்பனம்! 2022ம் ஆண்டு தேர்தல்கள் ஒரு பார்வை
2022ம் ஆண்டில் முக்கியமாக 7 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்தன. கடந்த பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய 5மாநிலங்களில் சட்டப்பேரைவத் தேர்தல் நடந்தது. அதன்பின் நவம்பர் மாதத்தில் இமாச்சலப்பிரேதசத் தேர்தலும், டிசம்பரில் 1,5ஆகிய தேதிகளில் குஜராத்தில் சட்டப்பேரைத்தேர்தலும் நடந்தது.
2022ம் ஆண்டில் முக்கியமாக 7 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்தன. கடந்த பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய 5மாநிலங்களில் சட்டப்பேரைவத் தேர்தல் நடந்தது. அதன்பின் நவம்பர் மாதத்தில் இமாச்சலப்பிரேதசத் தேர்தலும், டிசம்பரில் 1,5ஆகிய தேதிகளில் குஜராத்தில் சட்டப்பேரைத்தேர்தலும் நடந்தது.
இந்த 7 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இமாச்சலப்பிரதேசத்தில் மட்டும்தான் ஆட்சியைஇழந்தது. பஞ்சாப்பில் பாஜகவுக்கு பவர் இல்லை என்பதால், அந்தக் கட்சியை மக்கள் அங்கீகரிக்கவில்லை. மற்ற 5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் கட்சி பஞ்சாப்பில் ஆட்சியில் இருந்து தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது.
இது தவிர ஏப்ரல்12ம்தேதி மே.வங்க மாநிலம் அசன்சோல், பஞ்சாப்பின் சங்க்ரூர் மக்களவைத் தொகுதிகளுக்கும், ஜூன்23ம்தேதி, உத்தரப்பிரதேசத்தில் ராம்பூர், ஆசம்கார்க் ஆகிய மக்களவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது. டிசம்பர் 5ம்தேதி மெயின்பூரி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.
இதுமட்டுமல்லாமல் பிப்ரவரி 14ம் தேதி முதல், டிசம்பர் 5ம் தேதிவரை ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், டெல்லி, ஜார்க்கண்ட், ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா, உ.பி., உத்தரகாண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் இடைத் தேர்தல் நடந்தது.
5 மாநிலத் தேர்தல்
திணறப் போகுது டெல்லி!40,000 பேர்!ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளை டெல்லி பிரவேசம்
இதில் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் தக்கவைத்தது. பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து, ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது.
கோவா:
கோவா மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்ேபரவைத் தேர்தலில் பாஜக 20 இடங்களில் வென்று சிறு கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. முதல்வராக பிரமோத் சாவந்த் பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டும் வென்றது.
மணிப்பூர்
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 32 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வென்றது
பஞ்சாப்:
பஞ்சாப் மாநிலத்தில் 117 இடங்களுக்கு பிப்ரவரி 20ம்தேதி நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் அபார வெற்றியுடன் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் மட்டுமே வென்றது. அகாலி தளம் 3, பாஜககூட்டணி 2 இடங்களில் மட்டுமே வென்றது
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் பாஜக கட்சி, 255 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது, முதல்வராக யோகி ஆதித்யநாத் மீண்டும் பொறுப்பேற்றார். 2வது இடத்தில் சமாஜ்வாதிக் கட்சி 111 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ்கட்சி 2 இடங்களிலும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் வென்றது.
ஜி20 உச்சி மாநாடு: டெல்லியிலிருந்து 1,000 பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்
உத்தரகாண்ட்
உத்தரகாண்டில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பாஜக 47 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது, புஷ்கர்சிங் தாமி முதல்வராகினார். காங்கிரஸ் கட்சி 11 இடங்களி்ல் வென்றது.
இமாச்சலப்பிரதேசம்
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் மாதம் நடந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக ஆட்சியை இழந்தது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு.. சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்
குஜராத்
குஜராத்தில் நடந்த தேர்தலில் 182 சட்டசபைத் தொகுதிகளில் பாஜக 157 தொகுதிகளில் வென்று வரலாற்று வெற்றி பெற்றது. குஜராத்தில் தொடர்ந்து 7வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது பாஜக. ஏறக்குறைய 27 ஆண்டுகளாக பாஜக குஜராத்தில் ஆட்சி செய்து வருகிறது, இந்தத் தேர்தல் வெற்றி மூலம் பாஜகவின் ஆட்சி ஆனிவேர் 32 ஆண்டுகளாக வலுவாக ஊன்றப்போகிறது.